குடிநீர் கேனில் உயிருள்ள தவளை.. வாடிக்கையாளர் அதிர்ச்சி...!

 
குடிநீரில் தவளை

தமிழகம் முழுவதும் குடிநீருக்கு கேன்கள் மூலம் வீடு வீடாக சப்ளை செய்யப்படுகின்றன இதனை அந்தந்த வட்டாரங்களில் இருக்கும் தனியார் நிறுவனங்கள் நீரை சுத்திகரித்து கேன்களில் அடைத்து விற்பனை செய்து வருகின்றன. அந்த வகையில் மயிலாடுதுறையில்  கிருஷ்ணா என்ற பெயரில் குடிநீர் விற்பனை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் குடிநீரை  சுத்திகரித்து   கேன் ரூ 7  முதல் விற்பனை செய்து வருகிறது.   சிறிய பாட்டில்கள் முதல் ரூ40  மதிப்பிலான பெரிய கேன்கள் வரை குடிநீர் விற்பனை செய்து  வருகிறது. மயிலாடுதுறையில் இருந்து சுற்றுவட்டார ஊர்களுக்கும் இந்நிறுவனம் குடிநீர் சப்ளை செய்து வருகிறது.  

குடிநீர்
இந்நிலையில்  கச்சேரி சாலையில் உள்ள மளிகைக் கடை ஒன்றுக்கு விற்பனைக்கு சென்ற வாட்டர் கேனில் உயிருடன் தவளை இருந்ததை கண்டு வாடிக்கையாளர் அதிர்ச்சியடைந்தார். இது குறித்து உடனடியாக கலெக்டர்,  மற்றும் நகராட்சி உணவு பாதுகாப்புத்துறையில் புகார் அளித்துவிட்டார். இந்த புகாரின் அடிப்படையில்  சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.  இந்த ஆய்வில் வாட்டர் கேனில் தண்ணீர் நிரப்பப்பட்ட தேதி குறிப்பிடப்படவில்லை. அத்துடன்   காலாவதியாகும் தேதியும் குறிப்பிடப்பட வேண்டும்.  காலாவதியான தேதி குறிப்பிடாமல் உள்ள வாட்டர் கேனை வாங்கி விற்பனை செய்யக்கூடாது என  கடைக்காரருக்கு அறிவுறுத்தப்பட்டது.  இதன் பிறகு குறிப்பிட்ட நிறுவனத்தில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.  அங்கு மினி லாரியில் விற்பனைக்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்த வாட்டர் கேன்களில் ஆய்வு நடத்தப்பட்டது.

குடிநீர் கேன்

இதிலும்  தண்ணீர் நிரப்பப்பட்ட தேதி மற்றும் காலாவதியான தேதி குறிப்பிடவில்லை.   வாட்டர் கேன்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த இடத்தை அதிகாரிகள் ஆய்வு செய்ததில், அங்குத் தவளைகள், நத்தை, மரவட்டை என பல உயிரினங்கள் இருந்தன்.  உடனடியாக அந்த நிறுவனத்தில் சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ள உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் உத்தரவு பிறப்பித்தார்.   ஏற்கனவே குடிநீரில் தவளை இருந்ததற்கு நிறுவனம் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
 சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கேனில் தவளை உயிருடன் இருந்த சம்பவம் அப்பகுதியில்   பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி குளிர்ல தயிர் சாப்பிடலாமா... மருத்துவம் என்ன சொல்கிறது?!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web