பரபரப்பு... கார் மீது மோதி 30 அடி உயரத்தில் அந்தரத்தில் தொங்கிய லாரி!

 
லாரி
 

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு  காய்கறி லோடு ஏற்ற லாரி ஒன்று காலியாக  சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை  ஹரி என்பவர் ஓட்டி வந்தார்.  லாரி குன்னூர்-ஊட்டி சாலையில் பாய்ஸ் கம்பெனி அருகே சி.டி.சி. காலனி அருகே தாழ்வான பகுதியை நோக்கி வரும்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது.  

விபத்து

குடியிருப்பு பகுதியின் சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மீது லாரி மோதியது.சாலையோர குடியிருப்பின் மேல் தளத்தில் சுமார் 30 அடி உயரத்தில் அந்தரத்தில் தொங்கியபடி பாய்ந்து நின்றது. லாரி மோதியதால் கார் தூக்கி வீசப்பட்டு தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் லாரி டிரைவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.உடனடியாக  அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு  மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

ஆம்புலன்ஸ்


லாரி  அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருந்ததால் தீயணைப்புத்துறையினர் வரவழைக்கப்பட்டு நெடுஞ்சாலைத்துறை மற்றும் போலீசார் உதவியோடு கிரேன் மூலம் லாரியை மீட்கும் பணிநடைபெற்றது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது