நடுரோட்டில் திடீர் பள்ளம்… பாதாள சாக்கடையில் சிக்கிய லாரி!

 
லாரி
 

கோவை மாநகரில் பாதாள சாக்கடை பணிக்குப் பிறகு முறையாக மூடப்படாத சாலைகள் மீண்டும் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றன. நடுரோட்டில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் லாரி சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. சாலை பாரம் தாங்காமல் உள்வாங்கியதே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.

ஏற்கனவே ப்ரூக்ஃபீல்ட்ஸ், உடையாம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இதேபோல் லாரிகள் மற்றும் கனரக வாகனங்கள் பள்ளத்தில் சிக்கிய சம்பவங்கள் நடந்துள்ளன. புதிதாக அமைக்கப்பட்ட சாலைகளிலேயே திடீர் பள்ளங்கள் உருவாகி விபத்துகள் ஏற்படுவது தொடர் கதையாகி வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந்த நிலையில் மணியக்காரன் பகுதியில் சமீபத்தில் போடப்பட்ட புதிய சாலையில் சென்ற லாரி திடீர் பள்ளத்தில் சிக்கியது. அப்போது வேறு வாகனங்கள் இல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. ஆனால் சாலையில் நீண்ட பிளவு ஏற்பட்டிருப்பது மக்களை அச்சமடைய வைத்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!