பெரும் பரபரப்பு... போராட்டத்தில் விஷம் குடித்த பகுதிநேர ஆசிரியர் உயிரிழப்பு!

 
போராட்டம்

தங்களின் 13 ஆண்டுகால வாழ்வாதாரக் கோரிக்கைக்காகப் போராடி வந்த ஆசிரியர்களில் ஒருவரை இன்று இழந்து நிற்கிறது தமிழக ஆசிரியர் சமூகம். பணி நிலைப்பு கோரி சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர் கண்ணன் சிகிச்சை பலனின்றி இன்று மாலை உயிரிழந்தார்.

கடந்த 13 ஆண்டுகளாகப் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் போராடி வருகின்றனர். கடந்த ஜனவரி 8-ஆம் தேதி முதல் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வித் துறை அலுவலகத்தை (DPI) முற்றுகையிட்டு நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று போராட்டத்தின் போது ஆசிரியர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு, வானகரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டனர்.

போராட்டம்

திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், அரசின் மெத்தனப் போக்கைக் கண்டித்தும், தங்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியானதாலும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர் கண்ணன், அங்கு வைத்தே விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக அவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று மாலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

ஆசிரியர் கண்ணனின் மரணம் குறித்த செய்தி வெளியானதும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் மண்டபத்திலேயே கதறி அழுத காட்சி காண்போரை நெகிழச் செய்தது. "உயிரைக் கொடுத்து தான் உரிமையைப் பெற வேண்டுமா?" என்று கண்ணீர் மல்க ஆசிரியர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தமிழக அரசு உடனடி பேச்சுவார்த்தை நடத்தி, உயிரிழந்த ஆசிரியரின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும் என்றும், அனைத்து பகுதிநேர ஆசிரியர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்துள்ளன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!