தனிமையில் சந்திக்க சென்ற கள்ளக்காதலி... கழுத்தறுத்துக் கொன்ற காதலன்!
கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்த இளம்பெண் ஒருவர், பண விவகாரத்தால் தன்னுடன் பழகிய நபராலேயே படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில், உமா(28) என்பவருக்கும், ஆந்திராவைச் சேர்ந்த ராமாஞ்சேநயா என்பவருடன் திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாகக் கணவரைப் பிரிந்த உமா, தனது 2 மகள்களுடன் விஜயநகர் மாவட்டம் சப்லகட்டாவில் உள்ள தாய் வீட்டில் வசித்து வந்தார். மகன் ராமாஞ்சேநயாவுடன் உள்ளர். உமா சப்லக்ட்டாவில் ரயில்வே கேண்டினில் வேலை செய்து தனது வாழ்க்கையை நடத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் உமா வேலைக்குச் சென்ற இடத்தில் காஜா உசேன் (28) என்வருடன் பழக்கம் ஏற்பட்டு, அது கள்ளக்காதலாக மாறியுள்ளது. உமா தனது தேவைகளுக்காகக் காஜா உசேனிடம் அடிக்கடி கடன் வாங்கியதாகக் கூறப்படுகிறது. கொடுத்த பணத்தைத் திரும்பக் கேட்டு காஜா உசேன் உமாவை வற்புறுத்தி வந்துள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே அவ்வப்போது வாக்குவாதங்கள் ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில் சம்பவத்தன்று இரவு, காஜா உசேன் உமாவைத் தொலைபேசியில் அழைத்து, "தனிமையில் பேச வேண்டும், வீட்டின் அருகே உள்ள காலி இடத்திற்கு வா" என்று கூப்பிட்டுள்ளார். காதலன் கூப்பிடுகிறாரே என்று நம்பிச் சென்ற உமாவிடம், மீண்டும் பணத்தை கேட்டுத் தகராறு செய்துள்ளார் காஜா உசேன்.

உமாவிடம் பணம் இல்லாததால் அவர் மறுக்கவே, ஆத்திரமடைந்த காஜா உசேன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் உமாவின் கழுத்தை அறுத்துக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டுத் தப்பி ஓடிவிட்டார்.
இரத்த வெள்ளத்தில் கிடந்த உமாவின் உடலைக் கண்ட அக்கம்பக்கத்தினர் இது குறித்து போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். வழக்குப்பதிவு செய்த சப்லகட்டா போலீசார், செல்போன் சிக்னல் மற்றும் விசாரணையின் அடிப்படையில் காஜா உசேனைப் பிடித்து விசாரித்தனர். அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து, போலீசார் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
