எண்ணெய் கிடங்கில் பெரும் தீ விபத்து..!! 17 பேர் தீயில் கருகி பலியான சோகம் !!

 
இந்தோனேசியா

இந்தோனேசியா தெற்கு ஜகார்த்தாவில் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியான தனா மேரா என்னும் இடத்தில் அரசு சொந்தமான பிளமபாங்க் எண்ணெய் கிடங்கு அமைந்துள்ளது.  அந்நாட்டின் 25 சதவீத எண்ணெய் தேவையைப் பூா்த்தி செய்யும் இந்த எண்ணெய் கிடங்கில் வெள்ளிக்கிழமை தீ பரவியது. இந்த கோர தீ விபத்தில் சேமிப்பு கிடங்கில் இருந்த எரிபொருள் தீப்பற்றி எரிந்தது. அதையடுத்து, அந்தப் பகுதிக்கு 52 தீயணைப்பு வாகனங்களில் வந்த 260-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரா்கள், நெருப்பைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனா்.

இந்தோனேசியா

பற்றி எரிந்த தீ அருகில் இருக்கும் குடியிருப்பு பகுதிகளிலும் பரவியது தீயணைப்பு பணிகளில் மிகுந்த சிரமம் ஏற்பட்டது. அங்கு வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனா்.

இந்நிலையில் எரிபொருள் சேமிப்பு கிடங்கில் பயங்கர தீ விபத்தில் 16 பேர் பலியானதாக தகவல் வெளியாகி இருந்த நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 8 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்தோனேசியா

அண்மையில் பெய்த கனமழைக் காரணமாக எண்ணெய் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு எண்ணெய் கசிந்துளளது. மழைக்கு இடையில் இடி மின்னல்கள் அதிகமாக இருந்ததால் அதன் மூலம் தீப்பற்றியிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

From around the web