பரபரப்பு வீடியோ... திருப்பதி தேவஸ்தான ஊழியரை திட்டி தீர்த்த அறங்காவலர் குழு உறுப்பினர்!
திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவில் உலகப் பிரசித்தி பெற்றது. இந்தக் கோவிலில் தினமும் லட்சக்கணக்கானோர் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர்களில் ஒருவரான எஸ்.நரேஷ் குமார் சமீபத்தில் சாமி தரிசனம் செய்து முடித்து வெளியே வந்தபோது, பிரதான கேட் மூடப்பட்டிருந்தது. அவர் அந்த வழியாக செல்ல முயன்றபோது அருகில் நின்றிருந்த தேவஸ்தான் ஊழியர் மாற்று பாதை வழியாக செல்ல அறிவுறுத்தியுள்ளார்.
వైసిపి ప్రభుత్వం హయాంలో, టీటీడీ బోర్డు సభ్యులు గా నియమితులైన వారిలో, మంచి వారు తక్కువుగా ఉండేవారట.. కూటమి ప్రభుత్వం హయాంలో కుడా, బీజేపీ సిపార్సుతో నియమితులైన ఒక బోర్డు సభ్యుడు, టీటీడీ ఉద్యోగులు ను ఏలా తిడుతున్నారో, ఈ వీడియో లలో స్పష్టంగా కన్పిస్తుంది..తిరుమలలో శ్రీవారి సమక్షం… pic.twitter.com/npZaesL7XA
— 🚲 𝓓𝓲𝓵𝓮𝓮𝓹 🚲 (@dmuppavarapu) February 18, 2025
வி.ஐ.பி.க்கள் யாரையும் இந்த பாதை வழியாக அனுமதிக்க வேண்டாம் என அந்த ஊழியருக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. இது குறித்த அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டிருந்தது. இருந்தாலும் கோமடைந்த நரேஷ் குமார், அந்த ஊழியரை கடுமையாக திட்டி அவமதித்துள்ளார். இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினரின் இந்த செயலை பக்தர்கள் கண்டித்துள்ளனர். சிலர் வி.ஐ.பி.க்களுக்கான கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது குறித்து கேள்வி எழுப்பினர்.

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியும் இந்த வீடியோவை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளது. #SaveTirumalaFromTDP என்ற ஹேஷ்டேக் பதிவிட்டுள்ளது. அறங்காவலர் குழு உறுப்பினரின் செயலுக்கு கண்டனமும் தெரிவித்துள்ளது. அந்த வீடியோவில் அந்த ஊழியரை நரேஷ் குமார் திட்டுகிறார். இவ்வளவு நாகரிகமற்றவர்களுக்கு தேவஸ்தான் அங்காவலர் குழு உறுப்பினர் பதவியை நீங்கள் கொடுத்தீர்கள். முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு அவர்களே இது உங்களுக்கு அவமானம்" எனவும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கூறி உள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
