தாய் 3 வயது குழந்தையுடன் ஏரியில் குதித்து உயிரிழப்பு!

 
அரியலூர்
 

 

அரியலூர் மாவட்ட விக்கிரமங்கலம் அருகே புங்கக்குழி - ஆதனூர் கிராமத்தில் 3 வயது மகனை இடுப்பில் கட்டி, தாய் தற்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்வு 7 வயது மகன் முன்னிலையில் நடந்தது.

ஆம்புலன்ஸ்

பாண்டி லட்சுமி என்பவர் தனது 3 வயது மகனை இடுப்பில் கட்டி, ஏரியில் குதித்து தற்கொலை செய்தார். இதையடுத்து அவளும், குழந்தையும் உயிரிழந்தனர். சம்பவத்தின் போது மூத்த மகன் லோகேஷ் கதறி அழுததன் பின்னர், அருகில் இருந்த பொதுமக்கள் உடனடியாக மீட்பு முயற்சி மேற்கொண்டு இருவரையும் கரைக்கு கொண்டு வந்தனர். ஆனால் இருவரும் உயிரிழந்தனர்.

போலீஸ்

விக்கிரமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிரேத பரிசோதனைக்காக உடல்களை அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி, சம்பவம் தொடர்பாக கணவர் ரகுபதி மற்றும் குடும்பத்தினரிடமும் விசாரணை நடத்தத் தொடங்கியுள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!