மீண்டும் ஒரு நீட் மரணம்!! ரயில் முன் பாய்ந்து மாணவி தற்கொலை!!

 
நிஷா

இந்தியா முழுவதும் மருத்துவ படிப்பு படிக்க நீட் நுழைவு தேர்வு எழுத வேண்டியது அவசியம். அந்த வகையில் நடப்பாண்டிற்கான நீட் நுழைவு தேர்வு இந்தியா முழுவதும் மே மாதம் நடைபெற உள்ளது. இதற்காக மாணவர்கள் கடுமையாக பயிற்சி பெற்று வருகின்றனர்.  கடலூர் மாவட்டம் என் எல் சி ஒப்பந்த தொழிலாளியின் மகள் நிஷா . இவரும் நீட் தேர்வுக்கு  பயிற்சி வகுப்பு சென்று கொண்டிருந்தார்.

நீட் தற்கொலை

கடந்த ஆண்டு நீட் தேர்வில் தோல்வி அடைந்தார். மீண்டும் நடப்பாண்டில் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தார். இவர் தனியார் பயிற்சி வகுப்பிலும் சேர்ந்து படித்து வருகிறார்.  இந்நிலையில் நீட் தேர்வு பயிற்சி மையம் நடத்திய மாதிரி தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றார். இதனால் பெரும்  மன உளைச்சலுக்கு ஆளானார்.  இதனால்  வடலூர் ரயில் நிலையம் அருகே ரயில் தண்டவாளத்தில் பெங்களூரில் இருந்து கடலூர் நோக்கி வந்த ரயில் முன் தலையை வைத்து தற்கொலை செய்து கொண்டார்.

நீட் தற்கொலை

நீட் தேர்வுக்கு தயாரான மாணவி தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும்  ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web