புதிதாக கோவில்பட்டி மாவட்டம் உருவாக்கப்படும்... அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேச்சு!

 
கடம்பூர் ராஜூ

சூரியன் மறைய போகிறது. 2026ல் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் கோவில்பட்டியை தலைமை இடமாகக் கொண்டு மாவட்டம் உருவாக்கப்படும் என முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜூ பேசினார்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள இனாம் மணியாச்சி பஸ் நிறுத்தம் அருகே அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 77வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கோவில்பட்டி மேற்கு ஒன்றிய துணைச் செயலாளர் அழகு லட்சுமணன், மேற்கு ஒன்றிய பொருளாளர் ராமசுப்பு ஆகியோர் தலைமை வகித்தனர்.

செந்தில் பாலாஜி கையில் தான் திமுக உள்ளது... கடம்பூர் செ.ராஜூ!

இதில் முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் செ.ராஜூ, பாஸ்கரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழாவில் கடம்பூர் செ.ராஜூ பேசுகையில் "என்றைக்கும் தேர்தல் வரும் உதயசூரியனை விரட்டி விட்டு இரட்டை இலையை கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர். 2011ல் ஜெயலலிதா பதவி ஏற்றதும் தமிழகத்தில் இருந்து ரெளடிகள், குற்றவாளிகள் வெளி மாநிலத்திற்கு ஓடி விட்டனர். 

கடந்த அதிமுக 10 ஆண்டுகளில் அமைதி பூங்காவாக இருந்தது. தற்போது அமலிக்காடாக உள்ளது. அதிமுக ஆட்சியில் ஒரு அமைச்சர் மீது குற்றச்சாட்டு வந்ததும் அவரை உடனடியாக சிறையில் அடைந்தவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. தமிழ் வாழ்க என்று இங்கு கூப்பாடு போடும் முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் டெல்லியில் மோடி, அமித்ஷா முன்னாடி கூச்சல் இட தயாரா?, திமுகவினர் நடத்தும் சிபிஎஸ்இ பள்ளிகளை மூட தயாரா? அவர்கள் மூடினாலே தமிழகத்தில் பாதி அளவு இந்தி கற்றுக் கொடுப்பது குறைந்துவிடும். நாட்டுக்கு ஒரு சட்டம் வீட்டுக்கு சட்டம் என்பது தான் திமுக.

 கடம்பூர் ராஜூ

கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் ரூபாய் 800 கோடி ரூபாய்க்கு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது. கோவில்பட்டியை தலைமை இடமாகக் கொண்டு மாவட்ட அமைக்க அதிமுக ஆட்சியில் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் அது கிடப்பில் போடப்பட்டுள்ளது. 2026ல் அதிமுக ஆட்சி அமைந்ததும் கோவில்பட்டியை தலைமை இடமாகக் கொண்டு மாவட்டம் உருவாக்கப்படும். நிழலின் அருமை வெயிலில் போனால் தான் தெரியும். 2026ல் சூரியன் மறைய போகிறது. குளிர்ச்சி தரும் இரட்டை இலை மலரும். அதிமுக ஆட்சியும் வெகு தொலைவில் இல்லை என்றார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web