புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது... 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
பொதுவாகப் பிப்ரவரி மாதத்தில் வறண்ட வானிலை நிலவும் சூழலில், இந்த ஆண்டு வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாகப் பரவலாக மழை பெய்யத் தொடங்கியுள்ளது.
இந்தியப் பெருங்கடலின் கிழக்கு மற்றும் தெற்கு வங்கக்கடல் சந்திக்கும் பகுதியில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை பிப்.18ம் தேதி வாக்கில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் மேலும் வலுப்பெறக்கூடும்.

இன்றும், நாளையும் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். நாளை மறுதினம் பிப்.19ம் தேதி தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா பகுதிகளில் லேசான மழை தொடங்க வாய்ப்புள்ளது.
பிப். 21ம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை (டெல்டா மாவட்டங்கள்), புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி ஆகிய 10 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். பிப். 22ம் தேதி தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை தொடர வாய்ப்புள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்சமாக 32°C மற்றும் குறைந்தபட்சமாக 22°C ஆக இருக்கும். அதிகாலை வேளைகளில் லேசான பனிமூட்டம் காணப்படலாம்.
மன்னார் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் தென் தமிழக கடலோரப் பகுதிகளில் பிப். 19, 20 ஆகிய தேதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 55 கி.மீ. வேகம் வரை வீசக்கூடும். எனவே, இந்த நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
