புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது... தென்மாவட்டங்களில் கனமழைக்குக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது வரை இயல்பை விட 3% குறைவாகப் பெய்துள்ள நிலையில், வரும் வாரத்தில் மீண்டும் மழை பொழிவு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வரும் ஜனவரி 6-ம் தேதி அல்லது அந்த வாரத்தில் ஒரு குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகிறது. இது புயலாக மாறவோ அல்லது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதியாக வலுப்பெறவோ வாய்ப்பு குறைவு என கணிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாழ்வுப்பகுதி காரணமாகத் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் தமிழக மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையைப் பொறுத்தவரை மிதமான மழையும், நகரின் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
தற்போது வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், இன்று மற்றும் நாளை தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அக்டோபரில் தொடங்கிய வடகிழக்கு பருவமழை, 'டிட்வா' புயல் உள்ளிட்ட நிகழ்வுகளால் சென்னை மற்றும் வட மாவட்டங்களில் பரவலாகப் பெய்தது. எனினும், ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது தமிழகத்தில் மழையளவு இயல்பை விடச் சற்றே குறைவாகவே (3%) பதிவாகியுள்ளது. இந்த ஜனவரி மாத மழையானது அந்தப் பற்றாக்குறையைச் சரிசெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
