வசூலில் புதிய சாதனை... ரூ.100 கோடி வசூலைக் கடந்தது 'குட் பேட் அக்லி'!

உலகளவில் 'குட் பேட் அக்லி' படத்தின் வசூல் ரூ.100 கோடியை கடந்துள்ள நிலையில், ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
கடந்த ஏப்ரல் 10ம் தேதி வெளியான 'குட் பேட் அக்லி' படம் அஜித் ரசிகர்களை கடந்தும் வரவேற்பை பெறத் தொடங்கியிருக்கிறது. உலகளவில் 2 நாட்களில் ரூ.100 கோடியை கடந்திருக்கும் 'குட் பேட் அக்லி' படத்தின் வசூல், அஜித்தின் திரையுலக வாழ்வில், 2 நாட்களில் 100 கோடியைத் தொட்ட முதல் படம் என்ற சாதனையையும் படைத்திருக்கிறது.
தமிழகத்தில் திங்கட்கிழமையும் விடுமுறை என்பதால், அன்று வரை வசூல் குறைய வாய்ப்பில்லை என்கிறார்கள் வர்த்தக நிபுணர்கள். 5 நாட்களில் தமிழக வசூலேயே 100 கோடியை கடக்கும் என்கிறார்கள். இதன் மூலம் அஜித்தின் திரையுலக வாழ்வில் அதிக வசூல் செய்த படம் என்ற மாபெரும் சாதனையை படைக்க வாய்ப்பிருக்கிறது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித், த்ரிஷா, பிரசன்னா, அர்ஜுன் தாஸ், சுனில், ப்ரியா பிரகாஷ் வாரியர், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'குட் பேட் அக்லி'. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தினை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!