சொந்தபந்தங்களுக்கு அசைவ விருந்து... மீன் விலை கடும் உயர்வு!
நாகை மாவட்டத்தில் மாட்டுப் பொங்கல் பண்டிகை நேற்று உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. முன்னோர்களுக்குப் பிடித்த அசைவ உணவுகளைப் படைத்து வழிபடும் ‘படைப்பு’ சடங்கிற்காக, நாகை அக்கரைப்பேட்டை மீன்பிடித் துறைமுகத்தில் நேற்று அதிகாலை முதலே மக்கள் வெள்ளம் போலத் திரண்டனர்.

நாகை நகர் மட்டுமல்லாது நாகூர், சிக்கல், கீழ்வேளூர் மற்றும் அண்டை மாவட்டங்களான திருவாரூர், தஞ்சாவூர் பகுதிகளில் இருந்தும் ஏராளமான வியாபாரிகளும் பொதுமக்களும் இங்கு குவிந்தனர். வழக்கத்தை விட மீன்கள் வரத்து அதிகமாக இருந்த போதிலும், தேவை அதிகரித்ததால் விலையும் உச்சத்தில் இருந்தது.

ஒரு கிலோ வஞ்சிரம்: ரூ. 850. வாவல்: ரூ. 750 முதல் ரூ. 1,300 வரை. நண்டு: ரூ. 550 முதல் ரூ. 850 வரை, இறால்: ரூ. 600, பால் சுறா: ரூ. 700, பாறை & கடல் விரால்: ரூ. 550 - ரூ. 600, சங்கரா & சீலா: ரூ. 450, கனவா: ரூ. 350 - ரூ. 400, நெத்திலி & திருக்கை: ரூ. 300 விலையில் விற்கப்பட்டது. நாகை துறைமுகம் மட்டுமின்றி நாகூர், வேளாங்கண்ணி, வேதாரண்யம், கோடியக்கரை உள்ளிட்ட 25 மீனவக் கிராமங்களிலும் இதே போன்ற கூட்டத்தை காண முடிந்தது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
