தமிழகத்தை விட்டு சாரை, சாரையாக வெளியேறும் வடமாநிலத்தவர்!!

 
செண்ட்ரல்

தமிழகத்தில் டீக்கடைகள், பெட்டிக்கடைகள் தொடங்கி பெரிய ஷாப்பிங் மால்கள் , சினிமா தியேட்டர்கள் வரை வடமாநிலத்தவர்கள் தான் அதிகம் உள்ளனர்.  2 வேளை உணவு, சொற்ப சம்பளம், தங்குமிடம் இவைகளின் அடிப்படையில் கும்பலாக ஏஜெண்ட்கள் மூலம் இவர்கள்  தென்னியாவிற்கு பணிபுரிய வருகை தருகின்றனர். இங்கேயே தங்கி இருந்து, உணவும் இலவசம் என்பதால்  அதிக செலவுகளும் இல்லை. 

வடக்கன்கள்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வடமாநிலத்தவர்கள் குறித்த சர்ச்சைகள், தகவல்கள் பரவி வருகின்றன. குறிப்பாக அவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருப்பதாகவும், தொடர்ந்து தாக்கப்பட்டு வருவதாகவும் சமூக வலைதளங்களில் போலி வீடியோக்கள் பரவி வருகின்றன. இந்த மாதிரியான தவறான வடமாநிலத்தவர்கள் ஆயிரக்கணக்கில் தமிழகத்தை விட்டு வெளியேறி வருகின்றனர்.

வடக்கன்கள்

ஆனால் ஊருக்கு தயாராகி ரயிலில் செல்லும் வடமாநிலத்தவர்களிடம் இது குறித்து கேட்கப்பட்ட போது ஹோலி பண்டிகைக்காக செல்வதாக தான் கூறினர்.  சமூக வலைதளத்தில் பரவிய வதந்தியை நம்பி வெளியேறுவதால் தொழில் பாதிப்பு அடைவதாக தென்னிந்திய நூற்பாலைகள் சங்கம் கவலை தெரிவித்துள்ளது. பொதுவாக தமிழகத்தில் வட மாநிலத்தவர்களுக்கு எதிராக யாரும் எவ்வித அசம்பாவித  சம்பவங்களிலும் ஈடுபடவில்லை என்றபோதிலும்,முன்னெச்சரிக்கை காரணமாகவே  அவர்கள் சொந்த ஊர் திரும்பியதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. 

சமூக வலைதளங்களில் பரவிய வீடியோ குறித்து சட்டப்பேரவையில் பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளதாவது, பீகார் மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக கூறுவது வதந்தி என விளக்கம் தந்துள்ளார். வட மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை ஆராயவும் தமிழகம் முயற்சி செய்து வருகிறது. அதன் படி, வெளிமாநில தொழிலாளர்களுக்காக உதவி எண்களை தமிழ்நாடு காவல் துறை அறிவித்துள்ளது. .

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

From around the web