டேங்கர் லாரி சக்கரங்களில் சிக்கி சாலையில் நடந்தவர் பலி... பகீர் சிசிடிவி காட்சி !
பரேலி மாவட்டத்தின் பாக்ரென் டிப்போ அருகே நடந்த சாலை விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியையும் கவலையும் ஏற்படுத்தியுள்ளது. சமூக ஊடகங்களில் பரவி வரும் சிசிடிவி காட்சியில், நிறுத்தப்பட்ட எண்ணெய் டேங்கர் லாரியிலிருந்து பிளாஸ்டிக் கேனுடன் ஒருவர் இறங்கி சாலையில் நடந்து செல்கிறார். அதே நேரத்தில் டேங்கர் பின்செல்கையில் அவர் மோதி கீழே விழ, லாரி சக்கரங்களுக்கு அடியில் நசுங்கி உயிரிழக்கிறார். இது குறித்து சிசிடிவி காட்சி வெளியாகி மனதை பதறவைக்கிறது.
बरेली- तेल टैंकर से उतरा व्यक्ति के साथ हादसा, उतरते ही आया दूसरे तेल टैंकर की चपेट में
— भारत समाचार | Bharat Samachar (@bstvlive) November 30, 2025
टैंकर की चपेट में आने से मौके पर हुई मौत, एक्सीडेंट की घटना सीसीटीवी में हुई कैद, आंवला थाना क्षेत्र के बगरेन अड्डे की घटना @bareillypolice @Uppolice pic.twitter.com/6AjqypepZq
தொடர்ந்து லாரி முன்னே நகர்ந்தபடியே மீண்டும் உடலின் மேல் செல்லும் காட்சியும் வீடியோவில் இடம் பெற்றுள்ளது. அந்த நேரத்தில் அருகில் இருந்தவர்கள் காட்சியை பார்த்தும் யாரும் உடனடி உதவிக்கு முன்வரவில்லை. இது குறித்து பரேலி போலீசார் விரைந்து சம்பவ இடத்தில் சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீஸ் தகவலின்படி, ஆம்லா காவல் நிலைய வரம்பில் இந்த விபத்து குறித்து ஏற்கனவே எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், விபத்து காரணம் மற்றும் லாரி ஓட்டுனரின் அலட்சியம் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் சாலை பாதுகாப்பு, பொறுப்பான டிரைவிங், உடனடி மீட்பு விழிப்புணர்வு ஆகியவை இன்னும் எவ்வளவு அவசியம் என்பதை சமூகத்தின் முன் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
