அதிர்ச்சி!! ஒரே நேரத்தில் 150 மேமோஸ் சாப்பிட்டு இளைஞர் பலி!!

 
மேமோஸ்

சினிமாவில் பரோட்டா சூரி ஒரே நேரத்தில் 50 பரோட்டா சாப்பிடும் போட்டியில் கலந்து கொள்வார். அதில் பரோட்டாக்களை கோடுகளாக போட்டு போட்டியில்கலந்து கொள்ள வைப்பர். உணவக உரிமையாளர் 47 தான் சாப்பிட்ட என சொன்னதும் சூரி பூரா கோட்டையும் அழி மொத இருந்து நான் சாப்பிடுறேன் எனக் கூறுவார். இதே போல் பல சம்பவங்கள் ஆங்காங்கே நடப்பதுண்டு.  அதில் பலவிதமான பெட்களும் உண்டு. பீகாரின் கோபால்கஞ்ச் மாவட்டத்தில், ஒரே நேரத்தில்  150 மோமோக்களை சாப்பிடுவது தான் சவால். இதில் ஒரே நேரத்தில் 150 மேமோக்களை சாப்பிட்ட பிபின் குமார் பாஸ்வான் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இவருக்கு வயது 25 தான். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  பாஸ்வான் மொபைல் பழுது பார்க்கும் கடையில் பணிபுரிந்து வந்தார்.  

மேமோஸ்


 நண்பர்களை சந்தித்தபோது அவர்களுக்கிடையே யார் அதிகபட்சமாக மோமோக்கள் சாப்பிடுகிறார்கள் என்று போட்டியிடலாம் என முடிவு செய்யப்பட்டது.   பாஸ்வான் நண்பர்களின் சவாலை ஒப்புக்கொண்டு ஒரே நேரத்தில் 150 மோமோக்களை சாப்பிட்டுள்ளார்.

மேமோஸ்


 சாப்பிட்ட  பின் திடீரென பாஸ்வான் மயங்கி விழுந்ததால் உடனடியாக  மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள்  வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும் பாஸ்வானின்   உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்  பாஸ்வானின் தந்தை, தனது மகனின் நண்பர்கள் அவரை கொலை செய்ய திட்டமிட்டதாக  குற்றம் சாட்டி புகார் அளித்துள்ளார்.  நண்பர்கள்  வேண்டுமென்றே மோமோ சாப்பிடும் சவாலில் பாஸ்வானை ஈடுபடச்  சொன்னதாகவும், அதில் தனது மகனுக்கு விஷம் கொடுத்ததாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web