ஜில்லுன்னு ஒரு தகவல்.... மார்ச் 10ம் தேதி இடி மின்னலுடன் மிதமான மழை!

 
மழை

தமிழகத்தில் ஏப்ரல் மே மாதங்களில் தான்  கோடை வெயில் கொளுத்தும் ஆனால் இப்போதே சுட்டெரிக்க தொடங்கியுள்ள நிலையில்  கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச வெப்பநிலை தமிழகத்தில் அநேக இடங்களில் இயல்பிலிருந்து 2-4″ செல்சியஸ் அதிகமாக பதிவாகியுள்ளது. தமிழகத்தில் ஏனைய இடங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக இயல்பை ஒட்டியே இருந்தன.  வடதமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 34 – 39° செல்சியஸ், தென்தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 35 37° செல்சியஸ் மற்றும் தமிழக கடலோரப் பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 31-35° செல்சியஸ் பதிவாகியுள்ளது.

கன மழை

இப்போதே வெயில் இப்படி வெளுத்து வாங்கும் வகையில் இருப்பதால் கோடை மழை பெய்தால் நன்றாக இருக்கும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள். இந்நிலையில்  வெயிலுக்கு ஜில்..ஜில் கொடுக்கும் வகையில் மழைபெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது.அதன்படி மார்ச் 10ம் தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். 

மழை

அதைப்போல மார்ச் 11 மற்றும் 12ம் தேதிகளில்  தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை பொறுத்தவரை வானம்  ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் நிலவும். அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியசாகவும்,  குறைந்தபட்ச வெப்பநிலை 25° செல்சியசாகவும்  இருக்கக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web