திருச்சியில் தாழ்வாக வட்டமடித்த விமானம்… பரபரப்பு !

 
திருச்சி

 

திருச்சி மாநகரில் நேற்று தனியார் விமானம் ஒன்று மிகவும் தாழ்வாக வட்டமடித்தது. இதைக் கண்ட மக்கள், விமானம் தரையிறங்க முடியாத நிலையிலா என்ற அச்சத்தில் பரபரப்புக்கு உள்ளானார்கள். திடீரென வானில் வட்டமடித்த காட்சி பலரையும் அதிர்ச்சியடையச் செய்தது.

இந்த நிலையில், திருச்சி விமான நிலையத்தில் கடந்த ஒரு வாரமாக மண்வளம் தொடர்பான ஆய்வு நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். விமானங்கள் தரையிறங்கும் மற்றும் புறப்படும் பகுதிகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

அந்த ஆய்விற்காக வந்த விமானமே தாழ்வாக பறந்ததாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஆய்வு பணிகள் நிறைவு பெற மேலும் சில நாட்கள் ஆகும் என்றும், அதனால் பயணிகள் அச்சம் கொள்ள வேண்டாம் என்றும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!