கிராமமே திரண்டு வந்து கண்ணீர் அஞ்சலி...கபடி போட்டியில் வீரர் மயங்கி பலி!

 
ஜெகன்

சமீபகாலமாக திடீர் மாரடைப்பு உயிரிழப்புக்கள் அதிகரித்து வருகின்றன. உடற்பயிற்சி செய்பவர்கள், நடனம் ஆடுபவர்கள் தொடங்கி விளையாட்டு வீரர்கள், கல்லூரி மாணவ மாணவிகள், பள்ளியில் படிக்கும் சிறுவர்கள் வரை இந்த சோகம் அரங்கேறி வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் மதுரை மாவட்டத்தில்  நடைபெற்ற கபடி போட்டியில் 22 வயது இளைஞர் மயங்கி விழுந்து  உயிரிழந்தார். 

ஜெகன்
மதுரை மாவட்டத்தில் உள்ள பொய்கைகரப்பட்டி கிராமத்தில்,  மார்ச் மாதம் 04ம் தேதி கபாடி போட்டி நடைபெற்றது. பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த கபடி வீரர்களும் போட்டியில் கலந்துகொண்டு இருந்தனர். ரசிகர்கள் ஆரவாரத்துடன் போட்டி நடைபெற்றது.விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காரியாபட்டி வட்டம், மந்திரி ஓடை கிராமத்தில் வசித்து வருபவர் ஜெகன். இளைஞர் ஜெகன் பொய்கைக்கரைப்பட்டி கிராமத்தில் நடந்த கபடி போட்டியில், சில்வர் மவுண்டன் அணியின் சார்பாக களமிறங்கி இருந்தார்.

ஆம்புலன்ஸ்

விருதுநகர் மாவட்டத்தில் வசித்து வருபவர்  ஜெகன். இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கபடி போட்டியில் ரெய்டு சென்றிருந்தார். அந்த சமயத்தில்  எதிரணியினர் மடக்கி பிடித்து வெளியே வீசியதில் மூர்ச்சையானதாக கூறப்படுகிறது. அவரை பரிசோதித்த மருத்துவர்கள், தலையின் பின்புறத்திலுள்ள சுவாச நரம்பும், கொண்டை நரம்பும் செயலிழந்து விட்டதாக கூறிவிட்டனர்.  சிகிச்சை பலனின்றி ஜெகன் உயிரிழந்தார். ஜெகனின் இறுதி ஊர்வலத்தில் நூற்றுக்கணக்கான கபடி வீரர்கள் கலந்துகொண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்திய காட்சி காண்பவர்கள் உள்ளங்களை கனக்க வைத்தது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web