இல்லத்தரசிகளுக்கு இன்ப அதிர்ச்சி... சமையல் எண்ணெய் விலை குறையப் போகுது... கலால் வரி குறைப்பு!

 
இல்லத்தரசிகளுக்கு இன்ப அதிர்ச்சி... சமையல் எண்ணெய் விலை குறையப் போகுது... கலால் வரி குறைப்பு!
 

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின்மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. இதனையடுத்து  நாடு முழுவதும் சமையல் எண்ணெய் விலை 25% முதல் 34% வரை உயர்ந்துள்ளது. சூரியகாந்தி எண்ணெய், பாமாயில், சோயா பீன்ஸ் ஆயில் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதனை சரிகட்ட இறக்குமதிக்கான கலால் வரியை 10 சதவீதம் குறைக்கப்பதாக  மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

சமையல் எண்ணெய்

இந்த வரிக்குறைப்பு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் மத்திய நிதியமைச்சகம் கூறியுள்ளது. இதனால் சமையல் எண்ணெய் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த நடவடிக்கை மூலம்  சமையல் எண்ணெய் விலைகளைக் குறைத்து தேவையை அதிகரிக்கும், அதைத் தொடர்ந்து பாமாயில், சோயா எண்ணெய் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றின் வெளிநாட்டு கொள்முதலை அதிகரிக்கும்.  

சமையல் எண்ணெய்

கச்சா பாமாயில், கச்சா சோயா எண்ணெய் மற்றும் கச்சா சூரியகாந்தி எண்ணெய் மீதான அடிப்படை சுங்க வரியை முந்தைய 20 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாகக் குறைத்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில்  தெரிவித்துள்ளது. இந்த  3 எண்ணெய்களின் மொத்த இறக்குமதி வரியை முந்தைய 27.5 சதவீதத்திலிருந்து 16.5 சதவீதமாகக் குறைக்கும். ஏனெனில் அவை இந்தியாவின் வேளாண் உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு வரி மற்றும் சமூக நல கூடுதல் கட்டணத்திற்கும் உட்பட்டவை.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது