பயங்கரவாதிகள் தாக்குதலில் போலீஸ்காரர் வீர மரணம்!

 
ஜம்மு ஜம்மு
 

ஜம்மு–காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்புப் படையினரும் போலீசாரும் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் காஷ்மீரின் உதம்ப்பூர் மாவட்டம் சோஹன் கிராமம் அருகே உள்ள வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.

பயங்கரவாதிகள்

தகவலின் அடிப்படையில் நேற்று இரவு காஷ்மீர் போலீசாரும் மத்திய பாதுகாப்புப் படையினரும் தீவிர சோதனை நடத்தினர். அப்போது வனப்பகுதியில் மறைந்திருந்த பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் அம்ஜத் பதான் என்ற போலீஸ்காரர் வீர மரணம் அடைந்தார்.

பயங்கரவாதிகள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை

இதனைத் தொடர்ந்து பாதுகாப்புப் படையினர் பதிலடி தாக்குதல் நடத்தினர். பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே தொடர்ந்து துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது. அந்த பகுதி முழுவதும் முற்றுகையிடப்பட்டுள்ளது. கூடுதல் படைகள் குவிக்கப்பட்டுள்ளன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!