கல்லூரி மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்த பேராசிரியர்கள் - ஒருவர் சஸ்பெண்ட்!
திருப்பதியில் உள்ள தேசிய சமஸ்கிருதப் பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு படித்து வந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மாணவி ஒருவரை உதவிப் பேராசிரியர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியதோடு, மற்றொரு பேராசிரியர் அதை வீடியோ எடுத்ஹ்டு, மிரட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பதியில் உள்ள தேசிய சமஸ்கிருதப் பல்கலைக்கழகத்தில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்த மாணவியை உதவிப் பேராசிரியர் டாக்டர் லக்ஷ்மன் குமார் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தி பாலியல் பலாத்காரம் செய்து, கர்ப்பமாக்கியதாகக் கூறப்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல், லக்ஷ்மன் குமார் மாணவியுடன் தனியாக இருந்தபோது, மற்றொரு பேராசிரியர் ஆன சேகர் அதனைத் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். அந்தக் காட்சிகளைக் காட்டி சேகரும் மாணவியை மிரட்டிப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்த முயன்றுள்ளார்.

இதனால் பாதிக்கப்பட்ட மாணவி தேசிய சமஸ்கிருதப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜி.எஸ்.ஆர். கிருஷ்ணமூர்த்தியிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில், துணைவேந்தர் உடனடியாக உதவிப் பேராசிரியர் டாக்டர் லக்ஷ்மன் குமாரை இடைநீக்கம் (சஸ்பெண்ட்) செய்து உத்தரவிட்டார். பாதிக்கப்பட்ட மாணவி சொந்த ஊரான ஒடிசாவிற்குச் சென்றுவிட்டதால், பல்கலைக்கழகப் பதிவாளர் ரஜினிகாந்த் சுக்லா மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன் அடிப்படையில் போலீசார் இரண்டு பேராசிரியர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்து, அவர்களது செல்போன்களைப் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் புகார் அளிக்க விரும்பவில்லை என்று கூறியதால், துணைவேந்தர், மாணவர்கள் நலனுக்காக உள்ள கமிட்டி மூலம் விசாரணை நடத்தி அறிக்கை வழங்க உத்தரவிட்டுள்ளார். அந்த அறிக்கையின் அடிப்படையில் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பல்கலைக்கழகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
