வெளிநாட்டு போர் பயிற்சியில் பங்கேற்ற முதல் இந்திய பெண் விமானி! குவியும் பாராட்டுக்கள்!

 
அவனி சதுர்வேதி

இன்றைய காலக்கட்டத்தில் ஆண்களை விட பெண்கள் எல்லா துறைகளிலும் சாதித்து வருகின்றனர். தொழில்துறை, தொழில்நுட்பம், ஊடகம், அரசியல் என அனைத்திலும் ஆளுமையாக உள்ளனர். தற்போது ராணுவத்திலும் அவர்கள் அசத்தி வருகின்றனர். அப்படி ஒரு சாதனை வீராங்கனை தான் அவனி சதுர்வேதி (29). 

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த அவனி சதுர்வேதி ராஜஸ்தான் பனஸ்தாலி பல்கலைக்கழகத்தில் படித்து பி.டெக். பட்டம் பெற்றார். தொடர்ந்து ஐதராபாத்தில் இந்திய விமானப்படை கல்விக்கழகத்தில் பயிற்சி பெற்றார்.

அவனி சதுர்வேதி

2016ஆம் ஆண்டு, ஜூன் மாதம் இந்திய விமானப்படை போர் விமானியாகி (சுகோய்-30 எம்.கே.ஐ. விமானி) புதிய சரித்திரம் படைத்தார். இந்த சாதனை சரித்திரத்தில் இவருடன் சமபங்கு பெறுபவர்கள், பாவனா காந்த், மோகனா சிங் ஆவார்கள். இந்திய விமானப்படையில் தற்போது 20 பெண் போர் விமானிகள் உள்ளனர்.

இந்த நிலையில் ஜப்பான் விமானப்படையுடன் இந்திய விமானப்படையும் இணைந்து 'வீர் கார்டியன்-2023' என்ற பெயரில் கூட்டு போர் பயிற்சி நடத்தியது. இதில் அவனி சதுர்வேதியும் பங்கேற்று அசத்தி இருக்கிறார். இதில் அவனி சதுர்வேதி பங்கேற்றதின் மூலம், வெளிநாட்டில் நடந்த போர் பயிற்சியில் பங்கேற்ற முதல் இந்திய பெண் போர் விமானி என்ற புதிய சரித்திரத்தையும் எழுதி உள்ளார். 

அவனி சதுர்வேதி

இந்த போர் பயிற்சியில் வான் போர் சூழ்ச்சி, இடைமறிப்பு மற்றும் வான் பாதுகாப்பு பணிகள் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

 
 

From around the web