மாநிலங்களவை வரலாற்றில் சாதனை... 17 மணி நேரத்துக்கு மேலாக நீடித்த வக்ஃப் மசோதா விவாதம்!

இந்தியாவில் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கிடையே வக்ஃப் மசோதா இரு அவைகளிலும் நிறைவேறியது. அதே நேரத்தில் ராஜ்யசபாவில் வக்ஃப் மசோதா மீதான விவாதம் 17 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது, இது 1981 ம் ஆண்டில் நடந்த கடைசி மிக நீண்ட விவாதத்தை முறியடித்தது.கடந்த வாரம் மாநிலங்களவையில் வக்ஃப் (திருத்த) மசோதா மீதான விரிவான மற்றும் கடுமையான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதம் இந்திய பாராளுமன்ற மேல்சபை வரலாற்றில் மிக நீண்ட விவாதம் நடத்திய புதிய சாதனையை படைத்தது. இதன் மூலம் 17 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது, 1981 இல் கடைசியாக நடந்த மிக நீண்ட விவாதத்தை முறியடித்தது.
With MoS @arjunrammeghwal Ji, @Murugan_MoS Ji, Secretary, Adl. Secretary & JS in the Ministry of Parliamentary Affairs.
— Kiren Rijiju (@KirenRijiju) April 6, 2025
Discussion on Waqf Amendment Bill for 17 hours, 2 minutes in Rajya Sabha broke the earlier record time discussion on ESMA (16 Hrs 55 Minutes) created in 1981! pic.twitter.com/v9UYQ5z6bB
மாநிலங்களவையில் இதுவரை இல்லாத அளவுக்கு நீண்ட விவாதத்தை 'நடைமுறைப்படுத்தியவர்கள்' குறித்து கொள்ள நாடாளுமன்ற விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு பேட்டியளித்துள்ளார். அதில் "நாடாளுமன்ற விவகார அமைச்சகத்தில் இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், செயலாளர், துணைச் செயலாளர் மற்றும் ஜே.எஸ். முருகன் ஆகியோருடன். வக்ஃப் திருத்த மசோதா மீதான விவாதம், 1981 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட எஸ்மா (16 மணி நேரம் 55 நிமிடங்கள்) மீதான முந்தைய சாதனை நேர விவாதத்தை முறியடித்தது!" என திரு. ரிஜ்ஜு தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். பட்ஜெட் கூட்டத்தொடரின் இறுதிக்கு முந்தைய நாளான ஏப்ரல் 3ம் தேதி, மாநிலங்களவை அதன் வரலாற்றில் மிக நீண்ட அமர்வைக் கண்டது, இது வியாழக்கிழமை காலை 11:00 மணி முதல் மறுநாள் அதிகாலை 4:02 மணி வரை நீடித்தது.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வக்ஃப் மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகு, திரு. ரிஜ்ஜு இது குறித்து “ நாடாளுமன்ற நடவடிக்கைகளில் இது ஒரு புதிய சாதனை என்றும், இடையூறு இல்லாமல் வியத்தகு விவாதத்திற்கு இது ஒரு சான்றாகும் ” எனவும் கூறியிருந்தார். ராஜ்யசபா தலைவர் ஜக்தீப் தன்கர், வக்ஃப் (திருத்த) மசோதா, 2025 நிறைவேற்றப்பட்டதை "வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டம்" என்று பாராட்டினார், மேலும் இது உரையாடல் மற்றும் பகிரப்பட்ட நோக்கம் மூலம் எதை அடைய முடியும் என்பதற்கான சக்திவாய்ந்த நினைவூட்டல் எனவும் புகழாரம் சூட்டினார். "முன்னோடியில்லாத" அமர்வில் இணைந்ததற்காக மேல்சபை உறுப்பினர்களை திரு தன்கர் வாழ்த்தினார், மேலும் "சட்டமன்ற வரலாற்றில் மாநிலங்களவை அதன் பெயரைப் பொறித்துள்ளது" என்றார்.
"ஏப்ரல் 3 ம் தேதி காலை 11 மணிக்குத் தொடங்கிய இந்த அமர்வு, மறுநாள் அதிகாலை 4.02 மணி வரை, அதாவது இன்று வரை நீடித்தது. வரலாற்றில் இதுவே மிக நீண்டது," எனக் கூறியிருந்தார். சட்டத்தை விவாதிக்க உறுப்பினர்களின் 17 மணி நேர முயற்சிகளுக்கு பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார். "இது மக்களுக்கு மிகப்பெரிய செய்தியை அனுப்பும், மேலும் இந்த மகத்தான நிறுவனத்தின் மீதான நம்பிக்கையை அதிகரிக்கும். மாநிலங்களவை மீண்டும் ஒருமுறை, மற்றவர்களால் பின்பற்றத்தக்க ஜனநாயக தரங்களை அமைத்துள்ளது," எனக் கூறியுள்ளார். ஒட்டுமொத்தமாக, பட்ஜெட் அமர்வில் மாநிலங்களவை மொத்தம் 159 மணி நேரம் செயல்பட்டது, உற்பத்தித்திறன் 119 சதவீதமாக இருந்ததாக கூறியுள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!