100 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை!! வரலாற்றில் இடம் பிடித்த வீராங்கனை!!

 
தீப்தி சர்மா

தீப்தி சர்மா இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் ஆல் ரவுண்டர். இவர் தன்னுடைய திறமையால் நட்சத்திர வீராங்கனையாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார்.  தற்போது நடைபெற்று வரும்  டி20 மகளிர் உலகக் கோப்பை தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் சுற்றுப் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் தீப்தி சர்மா, 3 விக்கெட்டுகளை கைப்பற்றி வெற்றிக்கு வழி வகுத்தார்.

தீப்தி சர்மா

இதன் மூலம்  டி20 சர்வதேசப் போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்துள்ளார் தீப்தி. மகளிர் கிரிக்கெட் அணியில் மட்டுமல்ல ஆண்கள் அணிகளையும் சேர்த்தே டி20 போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதில் ஆண்கள் அணியில் டி 20 போட்டிகளில்  யுஸ்வேந்திர சாஹல் அதிகபட்சமாக 91 விக்கெட்களை வீழ்த்தினார். சர்வதேச  அளவில் இதில் முதலிடத்தில் இருப்பது மேற்கிந்திய தீவுகள் வீராங்கனை அனிஷா முகம்மது. இவர்  125 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தை தட்டி பறித்துள்ளார்.

தீப்தி சர்மா

இது குறித்து தீப்தி செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் "ட்ரெஸ்ஸிங் ரூமில் விவாதித்த திட்டங்களை களத்தில் செயல்படுத்த முடிந்ததில் மகிழ்ச்சி. 100 டி20 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்தியர் என்ற சாதனை  ஒரு பெரிய  மைல்கல் தான். இனி இதே போல் சர்வதேச உலகக்கோப்பை போட்டிகளிலும் கவனம் செலுத்துவேன் என  தெரிவித்துள்ளார். இவர் மகளிர் கிரிக்கெட் அணியில் ஆல் ரவுண்டராகவும்,  மேட்ச் வின்னராக உருவெடுத்து வருகிறார்.  தீப்தியை அவரது சொந்த மாநிலமான உத்தரபிரதேச வாரியர்ஸ் அணி 2.6 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

From around the web