அதிர்ச்சி!! கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை கொடுத்து மிரட்டல் !! தொடரும் வன்முறை!!

 
பத்மா

ஒடிசா மாநிலம் நபரங்பூர் மாவட்டத்தில் உள்ள ஜகன்நாத்பூர் பகுதியில் லலியா ருஞ்சிகர் (38), பத்மா (35) தம்பதி வசித்து வருகின்றனர். இதில் பத்மா சுகாதாரத்துறையில் பணியாற்றும் ஆஷா ஊழியராவார். இவர்களுக்கு பக்கத்து வீட்டிலேயே பத்மாவுக்கு சகோதரி முறை கொண்ட பெண் ஒருவர் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். 

இந்த உறவுக்காரப் பெண் 5 மாதம் கர்ப்பமாக இருந்துள்ளார். இந்நிலையில், கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி அன்று பத்மா தனது உறவுக்காரப் பெண்ணை வழக்கமான மருத்துவ பரிசோதனைக்கு செல்லலாம் என அழைத்துள்ளார். இதனையடுத்து பத்மாவின் மகன், பத்மா மற்றும் அந்த உறவுக்கார பெண் இருவரையும் பைக்கில் அழைத்து ஒரு ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் இறக்கி விட்டுள்ளார். 

பத்மா

அங்கிருந்த ஒருவீட்டில் பத்மாவின் கணவர் இருந்த நிலையில், தம்பதி இருவரும் சேர்ந்த அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக ஒரு வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளனர். அந்த வீட்டில் பெண்ணை தள்ளி பூட்டிய நிலையில், பத்மாவின் கணவர் அந்த கர்ப்பிணி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். 

அதனை மனைவி பத்மா செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். சகோதரி முறைகொண்ட உறவுக்கார பெண்ணை கணவர் பாலியல் வன்கொடுமை செய்ததை பத்மா வீடியோ பதிவு செய்துள்ளார். அதன்பின்னர் இந்த சம்பவத்தை வெளியே சொன்னால் வீடியோவை பரப்பிவிடுவேன் என மிரட்டியுள்ளனர்.ஆனால், பாதிக்கப்பட்ட பெண் கடும் உடல், மன உளைச்சலுக்கு ஆளானார். இந்நிலையில், வீடியோ சமூக வலைதளங்களில்  பரவியுள்ளது. இதனால், அதிர்ச்சி அடைந்த பெண் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அதை தடுத்து உறவினர்கள் விவரத்தை விசாரித்த போது தான் உண்மை அம்பலமாகியுள்ளது.

பத்மா

பின்னர் உறவினர்கள் அளித்த ஊக்கம் காரணமாக பாதிக்கப்பட்ட பெண் காவல்துறையிடம் புகார் அளிக்கவே, பத்மா அவரது கணவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பத்மா மற்றும் பாதிக்கப்பட்ட பெண்ணின் தனிப்பட்ட குடும்ப தகராறே இதற்கு காரணம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த கொடூர சம்பவம் தொடர்பாக காவல்துறை தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web