புதிய வேலைவாய்ப்பு சட்டத்துக்கு எதிராக பாராளுமன்றத்தில் விடிய விடிய போராட்டம்!
நாடாளுமன்றத்தில் ‘வளர்ந்த பாரத ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்பு’ (விபி–ஜி ராம் ஜி) சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு எதிராக, எதிர்க்கட்சி எம்பிக்கள் விடியவிடிய தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர். மக்களவையில் மூன்று நாள் விவாதத்துக்குப் பிறகு இந்த மசோதா நேற்று காலை நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து மாநிலங்களவையிலும் நள்ளிரவு வரை விவாதம் நடந்த நிலையில், மசோதா நிறைவேற்றப்பட்டது.

இந்த சட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு சட்டத்தை மாற்றும் வகையில் கொண்டு வரப்பட்டதாகும். இதில் காந்தியின் பெயர் நீக்கப்பட்டதும், மாநில அரசுகள் 40 சதவீதம் நிதி வழங்க வேண்டும் என்பதையும் எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. இது ஏழைகளின் உரிமைகளை பறிக்கும் முயற்சி என குற்றம்சாட்டினர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று நள்ளிரவு முதல் நாடாளுமன்ற வளாகத்தில் எம்பிக்கள் அமர்ந்து போராட்டம் நடத்தினர். காந்தியின் பெயர் நீக்கத்திற்கு எதிராகவும், மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தும் முழக்கங்கள் எழுந்தன. இந்த போராட்டத்தில் தமிழக மாநிலங்களவை உறுப்பினர்கள் திருச்சி சிவா, வில்சன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
