அதிர்ச்சி... சீட்டுக்கட்டு விளையாடச் சென்ற போது தகராறில் ரவுடி கொலை!

தமிழகத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நீலந்தாங்கல், பெரிய ஏரி பகுதியில் ஆண் சடலம் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த அதிகாரிகள் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விசாரணையில், கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்டவர் 42 வயது ஐயப்பன் என்பது தெரியவந்தது.புதுச்சேரி மாநிலத்தில் உள்ள இந்திரா நகர் பகுதியில் வசித்து வருபவர் ஐயப்பன். வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலை மேற்கொண்டு வந்தார். இவரின் மீது 5 க்கும் மேற்பட்ட வழக்குகள் புதுச்சேரியில் நிலுவையில் இருந்து வருகின்றன.
இந்த சம்பவ நாளில் நண்பர்களுடன் சீட்டு விளையாடி கொண்டு இருந்தவர், வட்டிக்கு கொடுத்த பணத்தை கேட்டுள்ளார். அப்போது உடனான தகராறில் ஐயப்பனை கொலை செய்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது தெரியவந்தது. இதனையடுத்து, குற்றவாளிகளை அதிகாரிகள் வலைவீசி தேடி வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!