45 சவரன் தங்க நகைகளை திருப்பி ஒப்படைத்த தூய்மை பணியாளர்… முதல்வர் ஒரு லட்சம் பரிசு, பாராட்டு!
தியாகராயநகரில் வண்டிக்காரன் சாலையில் கிடந்த 45 சவரன் தங்க நகைகளை தூய்மைப் பணியாளர் பத்மா கண்டெடுத்தார். அந்த நகைகளை அவர் உடனடியாக காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அவரது நேர்மையான செயல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

இந்த தகவலை அறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பத்மாவை நேரில் சந்தித்து பாராட்டினார். அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். மேலும், அவரது நேர்மையை மதித்து ரூ.1 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கினார்.
பத்மாவின் செயல் சமூக வலைதளங்களில் பெரும் பாராட்டை பெற்றுள்ளது. தூய்மைப் பணியாளர்களின் நேர்மை மற்றும் பொறுப்புணர்வை போற்றும் நிகழ்வாக இது அமைந்துள்ளது. இப்படியான செயல்கள் சமூகத்திற்கு நல்ல எடுத்துக்காட்டாக இருக்கும் என்று மக்கள் கூறுகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
