கிராமமே சோகம்... மாட்டின் கயிறு காலில் சிக்கி தரதரவென இழுத்துசெல்லப்பட்டு பள்ளி மாணவன் பலி!

தமிழகத்தில் திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த புல்லூர் ஊராட்சியில் மார்ச் 7ம் தேதி எருது விடும் விழா நடத்தப்பட்டது.
இதில் பார்வையாளர்கள் கூட்டத்தில் நின்ற சீமுக்கம்பட்டு கிராமத்தில் வசித்து வந்த பன்னீர்செல்வத்தின் மகன் 8ம் வகுப்பு மாணவன் 13 வயது சதீஷ் காலில் சீறிப்பாய்ந்த மாட்டின் கயிறு சிக்கியது.
இந்த கயிறால் சதீஷ் தரதரவென இழுத்துச்செல்லப்பட்டு கழுத்து, தலை, இடுப்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.அங்கிருந்தவர்கள் மாணவனை மீட்டு உடனடியாக , வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மாணவன் நேற்று உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!