‘பெட் ஷோ’விற்கு யானையை அழைத்து வந்த பள்ளி மாணவி !

 
யானை
 

கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே கரூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் நடந்த ‘பெட் ஷோ’ கண்காட்சி அனைவரையும் திகைக்க வைத்தது. பூனை, நாய் என செல்லப் பிராணிகள் வரிசையில், மாணவி ஒருவர் யானையையே அழைத்து வந்தார். திடீரென பள்ளி வளாகத்தில் கம்பீரமாக நின்ற யானையை பார்த்து மாணவர்கள், ஆசிரியர்கள் உறைந்தனர்.

யானை

செல்லப் பிராணிகள் கண்காட்சியில் யானை காட்சிப்படுத்தப்பட்டதோடு, அதன் அருகே நின்று புகைப்படம் எடுக்கவும் அனுமதிக்கப்பட்டது. சிலர் யானை மீது ஏறி அமர்ந்ததாகவும் தகவல் வெளியாகி, சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள் வைரலானது. ‘பெட் ஷோவா… பூரமா?’ என நெட்டிசன்கள் கிண்டல் செய்தனர்.

விஷயம் வெளியானதும் எடப்பள்ளி வனச்சரக அதிகாரிகள் பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை நடத்தினர். யானையை பள்ளிக்கு கொண்டு வர அனுமதி பெற்றதா, யானை மீது ஏற அனுமதி இருந்ததா என கேள்வி எழுப்பினர். உரிய அனுமதி இருந்ததாக பள்ளி தரப்பு விளக்கம் அளித்தாலும், எழுத்து மூல அறிக்கை கேட்டு வனத்துறை நோட்டீஸ் விட்டுள்ளது. இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!