கச்சத்தீவை மீட்க தனித்தீர்மானம்... பாஜக ஆதரவு... நாடகம் ஆடும் திமுக...அண்ணாமலை காட்டம்!

தமிழகத்தில் கச்சத்தீவை மீட்க வலியுறுத்தி தீர்மானம் கொண்டுவரப்பட்டது. தீர்மானத்தை முன்மொழிந்து அவையில் பேசிய முதல்வர் ஸ்டாலின் இலங்கை அரசிடம் தவிக்கும் மீனவர்கள், படகுகளை நல்லெண்ண அடிப்படையில் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை செல்லும் பிரதமர் மோடி அந்நாட்டு பிரதமருடன் இந்த விவகாரம் தொடர்பாக பேச வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
சீர்குலைந்து கிடக்கும் சட்டம் ஒழுங்கு, குழந்தைகள், பெண்களுக்கெதிரான பாலியல் கொடுமைகள், அதிகரித்து வரும் பட்டியல் சமூக மக்களுக்கெதிரான வன்முறைகள் என, தமிழகம் இதுவரை இல்லாத மோசமான இருண்ட காலத்தில் இருக்கும்போது, நாளொரு மேடை பொழுதொரு நடிப்பு என்று நாடகமாடிக் கொண்டிருக்கிறார்… pic.twitter.com/VT7kqrhIje
— K.Annamalai (@annamalai_k) April 2, 2025
சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் கொண்டுவந்த தனித் தீர்மானத்திற்கு பாஜக ஆதரவு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அவையில் பேசிய வானதி சீனிவாசன், மத்திய அரசு மீனவர்கள் அனைவரையும் இந்திய குடிமக்களாகவே பார்க்கிறது. கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டது முதல், அது தவறு என பாஜக கூறி வருவதாகவும், வரலாற்று பிழையை சரிசெய்ய பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் எனவும் வானதி தெரிவித்தார்.
கச்சத்தீவை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கக்கோரி பேரவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை நாடகம் என அண்ணாமலை விமர்சனம் செய்த சில நிமிடங்களில் வானதி சீனிவாசன் ஆதரவு தெரிவித்திருக்கிறார். அதன்படி, தேர்தல் நேரத்தில் மட்டும் கச்சத்தீவு மீட்போம் என கபட நாடகம் ஆடுகிறார். முதல்வரின் இன்றைய நாடகம் கச்சத்தீவு மீட்புத் தீர்மானம் என அண்ணாமலை சமூக வலைதளத்தில் விமர்சனம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!