டிசம்பர் 12 முதல் பார்சல்களுக்கு 12 பெட்டிகள் கொண்ட தனி ரயில்!
தெற்கு ரயில்வே சார்பில் பார்சல் போக்குவரத்துக்காக முழுக்க முழுக்க 12 பெட்டிகள் கொண்ட தனி ரயில் முதல்முறையாக டிசம்பர் 12ஆம் தேதி முதல் இயக்கப்பட உள்ளது. மங்களூரு – சென்னை ராயபுரம் இடையே இயக்கப்படும் இந்த ரயில், பொதுமக்களுக்கும் வணிகத்துறைக்கும் பெரும் நிம்மதியை அளிக்கும் புதிய சேவையாக ரயில்வே தெரிவித்துள்ளது.

இந்த பார்சல் ரயிலில் இணைக்கப்படும் ஒவ்வொரு பெட்டியிலும் 23 டன் வரை பொருட்கள் ஏற்ற முடியும். மேலும், சரக்கு ஏற்றத்திற்கான 12 பெட்டிகளும் ரயில் நிலையம் வாரியாக ஒதுக்கப்படும். டிசம்பர் 13ஆம் தேதி மதியம் 1.30க்கு ராயபுரம் வந்தடையும் இந்த ரயில், மறுமுறையாக டிசம்பர் 16ஆம் தேதி ராயபுரத்திலிருந்து புறப்பட்டு, 17ஆம் தேதி மங்களூருவைச் சென்றடையும். ரயில் ஓட்டுநர்கள், பரிசோதகர், ஏற்றுதல்–இறக்குதல் தொழிலாளர்கள் என தனிப்படை குழுவும் இணைக்கப்படுகின்றது.

சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, கோழிக்கோடு உள்ளிட்ட 12 முக்கிய நிலையங்களில் நின்று செல்லும் இந்தப் புதிய ரயிலுக்காக ராயபுரத்தில் தனி கட்டுப்பாட்டு அறையும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மங்களூரு–சென்னை பாதையைத் தொடர்ந்து, அடுத்தகட்டமாக சென்னை–திருச்சி–மதுரை வழியாக திருவனந்தபுரம் வரை பார்சல் ரயிலை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
