சினிமாவை மிஞ்சும் செட்டப்... மைத்துனியை மணக்க மனைவியை கொலை செய்த கணவர்...!

 
சினிமாவை மிஞ்சும் செட்டப்...  மைத்துனியை மணக்க மனைவியை கொலை செய்த கணவர்...!

 
உத்தரப்பிரதேசம் மாவட்டத்தில்  பிஜ்னோரில் வசித்து வருபவர்  அங்கித் குமார். இவருக்கு திருமணமாகி மனைவி கிரணுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் மார்ச் 8ம் தேதி, மாமியார் வீட்டிலிருந்து தனது வீட்டிற்கு மனைவியை பைக்கில் அழைத்துச் சென்றார்.  பெட்ரோல் பங்கில் தனது பைக்கிற்கு எரிபொருள் நிரப்புவதற்காக சாலையோரத்தில் கிரணை விட்டுவிட்டுச் சென்றிருந்தார். அதே நேரத்தில்  கிரண் மீது கார் ஒன்று மோதிவிட்டு நிற்காமல் சென்றதாக அங்கித் போலீஸில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் அடிப்படையில், வழக்குப் பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.  

அங்குள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில், விபத்தை ஏற்படுத்திய காரின் உரிமையாளர் அங்கித்தின் நண்பர் சச்சின் என தெரிய வந்தது. அவரைப் பிடித்து விசாரணை நடத்தியதில்  ​​அங்கித் செய்த சதித் திட்டம் தெரிய வந்தது.

அதாவது, அங்கித்துக்கு திருமணமாகி 5 வருடங்கள் ஆவதாகவும், ஆனால் குழந்தைகளே இல்லாததால் மனைவியின் தங்கையை திருமணம் செய்துகொள்ள நினைத்ததாகவும் கூறியுள்ளார்.  அந்த விருப்பத்தை மைத்துனியிடம் தெரிவித்துள்ளார். அக்கா உடன் வாழ்ந்து வருவதால் அங்கித்தின் விருப்பத்திற்கு அவர் மறுப்பு தெரிவித்து இருப்பதாகவும்,  இதன்காரணமாகவே, அவர் தனது மனைவியை கொலை செய்ய திட்டம் வகுத்திருப்பதாகவும்  போலீசார் தெரிவித்துள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web