ஒரேயொரு கையெழுத்து... காதலிக்காக காவல் நிலையத்தில் சொத்தை எழுதி வைத்த காதலன்!

‘என் பொண்ண எப்படி காப்பாத்துவான்னு நாங்க நம்பறது?” என்று காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த காதல் ஜோடியை சேர்த்து வைக்க சமாதானம் பேசிய போலீசாரிடம் பெண் வீட்டார் முரண்டு பிடித்த நிலையில், தன் சொத்தின் ஒரு பகுதியை இப்பவே காதலி பெயரில் எழுதி வைக்கிறேன் என்று காவல் நிலையத்தில் தனது பெயரில் உள்ள சொத்தின் ஒரு பகுதியை காதலி பெயரில் எழுதி வைத்து, திருமணத்திற்கு பெண்ணின் பெற்றோர்களிடம் சம்மதம் வாங்கியிருக்கிறார் காதலன் ஒருவர்.
சேலம் மாவட்டத்தில் இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய இளம்பெண் ஒருவரைக் காதலித்து வந்த நிலையில், பெண்ணின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சமடைந்த நிலையில், இந்த பையனை நம்பி எப்படி நாங்கள் பெண்ணை கொடுப்பது என பெற்றோர் கேட்க அந்த இடத்திலேயே சொத்தை எழுதி வைத்திருக்கிறார் காதலன்
சேலம் மாவட்டம் ஓமலூர் திமிரிகோட்டையைச் சேர்ந்தவர் சாருலதா. இவருக்கும் இளம்பிள்ளை பகுதியைச் சேர்ந்த விக்னேஷிற்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு, பின்னர் செல்போன் எண்களைப் பறிமாறிக் கொண்டு பேச, இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. தொடர்ந்து இருவரும் திருமணம் செய்ய முயற்சித்த நிலையில் பெண் வீட்டார் ஒப்புக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது.
பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து முரண்டு பிடிக்க காதலர்கள் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்து, தனது சொத்தின் ஒரு பகுதியை காதலி பெயரில் எழுதி வைத்து, பெண்ணின் பெற்றோரிடம் சம்மதம் வாங்கி பின் இருவீட்டு பெற்றோர்களும் சமாதானமடைந்து காதலர்களை ஏற்றுக் கொண்டனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!