அதிர்ச்சி... கடலுக்குள் மூழ்குகிறது முழு நகரமும்... தலைநகரை மாற்றுகிறது இந்தோனேஷியா!

 
இந்தோனேஷியா

தென்கிழக்கு ஆசியாவில் இந்திய பெருங்கடல், பசிபிக் கடல் இணையும் இடத்தில் உள்ள அமைந்துள்ளது இந்தோனேஷியா. பல்வேறு தீவுகளை உள்ளடக்கிய நாடாகும் இந்தோனேஷியா. கடலில் குட்டி குடடியாகவும் மொத்தம் 17 ஆயிரம் தீவுகளை கொண்டுள்ளது. தற்போது இதன் தலைநகராக ஜாவா தீவிலுள்ள கடலோர நகரமான ஜகார்த்தா உள்ளது. 

இந்தோனேஷியாவின் மொத்த மக்கள் தொகையில் 50 சதவிகிதத்துக்கும் அதிகமானோர் ஜாவா தீவில்தான் வசித்து வருகின்றனர். இந்நிலையில், உலகிலேயே மிக வேகமாக கடலில் மூழ்கி கொண்டுள்ள நகரமாக இந்தோனேஷியா தலைநகர் ஜகார்த்தா இருப்பதாக புதிய ஆய்வு தகவல் வெளியாகி பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தோனேஷியா

இதையடுத்து, தலைநகரை போர்னியா தீவின் நுசாந்தராவுக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டு, கடந்த 2019ஆம் ஆண்டே அதற்கான அனுமதியும் நாடாளுமன்றத்தில் அளிக்கப்பட்டது. விரைவில் போர்னியா தீவின் நுசாந்தராவில் தலைநகரம் நிர்மாணிக்கப்படும் என அதிபர் ஜோகோ விடாடோ இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்த நிலையில், கொரோனா பெருந்தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது தலைநகர் மாற்றத்துக்கான ஆரம்பக்கட்ட பணிகள் தீவிரமாகியுள்ளது. 

இந்தோனேஷியா

மக்கள் தொகை அதிகரிப்பால் நெரிசல், வாகன பெருக்கம், அதனால் காற்றுமாசு அதிகரிப்பு, கடலில் மூழ்கும் அபாயம் உள்ளிட்ட காரணங்களால் தலைநகரை மாற்ற முடிவெடுக்கப்பட்டதாக அந்நாட்டு அரசு விளக்கம் அளித்துள்ளது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!