பெரும் பரபரப்பு... சி.வி. சண்முகம், எம்.ஆர். விஜயபாஸ்கர் கட் அவுட்களுக்கு செருப்பு மாலை!

 
சிவி சண்முகம் சிவி சண்முகம்

அதிமுக சார்பில்   மார்ச் 17ம் தேதி கரூரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் பேசிய கருத்துக்கள் தற்போது பெரும் புயலைக் கிளப்பியுள்ளன. மேடையில் பேசிய அவர், பெண்களை உருவக் கேலி செய்யும் வகையில் அநாகரிகமாகப் பேசியது சமூக வலைதளங்களில் வைரலாகி கடும் கண்டனத்திற்கு உள்ளானது. இதேபோல், விழுப்புரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம், பிரபல நடிகை ஒருவரை ஒருமையில் விமர்சித்துப் பேசியதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

சி.வி.சண்முகம்

முன்னாள் அமைச்சர்களின் இத்தகைய தரம் தாழ்ந்த பேச்சுகள் பொதுமக்கள் மற்றும் குறிப்பாகப் பெண்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன. இதன் எதிரொலியாக, கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் வைக்கப்பட்டிருந்த அதிமுக முன்னாள் அமைச்சர்களின் பிரம்மாண்ட கட்-அவுட்கள் மற்றும் உருவப் படங்களுக்கு மர்ம நபர்கள் செருப்பு மாலை அணிவித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இன்று காலை இதைப் பார்த்த பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் அதிர்ச்சியடைந்த நிலையில், அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் தொடர்ந்து பேசி வரும் அரசியல் தலைவர்களுக்குப் பாடம் புகட்டவே இத்தகைய செயல்கள் நடைபெறுவதாகச் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த போலீசார், அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்கப் பாதுகாப்புப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர். அரசியல் நாகரிகத்தைத் தாண்டி தனிமனித விமர்சனங்களில் ஈடுபடுவது கட்சிக்குத் பின்னடைவை ஏற்படுத்தும் என அரசியல் நோக்கர்கள் எச்சரித்துள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!