களைகட்டத் தொடங்கும் தூங்கா நகரம்... சித்திரைத் திருவிழா வெளிநாட்டினருக்கு அழைப்பு!

 
களைகட்டத் தொடங்கும் தூங்கா நகரம்... சித்திரைத் திருவிழா வெளிநாட்டினருக்கு அழைப்பு!

தமிழகத்தில் உலகப் பிரசித்தி பெற்ற ஆலயம் மதுரை மீனாட்சியம்மன் கோவில். இந்த கோவிலில் சித்திரைத் திருவிழா ஏப்ரல் 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் இந்தத் திருவிழாவில் பட்டாபிஷேகம், திருக்கல்யாணம், தேரோட்டம் என மதுரை மாநகரமே களைகட்டும். திருவிழாக்களில் பக்தர்கள் அதிகளவில் கூடுவர். திருவிழாவின் மகுடமாக மே 12ம் தேதி கள்ளழகர் ஆழ்வார்புரம் வைகை ஆற்றில் இறங்குகிறார். அன்றைய தினம் லட்சக்கணக்கான பக்தர்கள் ஒன்று கூடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. 

களைகட்டத் தொடங்கும் தூங்கா நகரம்... சித்திரைத் திருவிழா வெளிநாட்டினருக்கு அழைப்பு!

2024ல் நடைபெற்ற சித்திரை திருவிழாவின் 12 நாட்களில் மொத்தம் 25 லட்சம் பக்தர்கள் திரண்டதாகவும், நடப்பாண்டில் 30 லட்சம் பக்தர்கள் திரள்வார்கள் எனவும் மதுரை மாநகராட்சி கணித்துள்ளது. பக்தர்களுக்குத் தேவையான சுகாதாரம், குடிநீர், மருத்துவம், சாலை கட்டமைப்பு மற்றும் பிற அடிப்படை வசதிகளை மேற்கொள்ள மாநகராட்சி தயாராகி வருகிறது. 

களைகட்டத் தொடங்கும் தூங்கா நகரம்... சித்திரைத் திருவிழா வெளிநாட்டினருக்கு அழைப்பு!

மாநகராட்சியில் 3,500 தூய்மைப்பணியாளர்கள் மட்டுமே இருப்பதால் அன்றாடம் 100 வார்டுகளின் தூய்மைப் பணிகளை செய்து முடிப்பது கூட பெரும் சவாலாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், உலக புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவை காண வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மதுரை மாவட்ட சுற்றுலா அலுவலகத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மதுரை சித்திரை திருவிழாவில் வெளிநாட்டினர் ஏராளமானோர் பங்கேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web