மனைவியை கொன்று விட்டு நாடகமாடிய கணவன்.. கண்ணீர் விட்டு கதறியழுத நடிப்பு!

 
பானுமதி

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த தோப்புக்கான பகுதியில் சேட்டு (35) - பானுமதி (32) தம்பதி வசித்து வந்தனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். சேட்டு, அவரது பானுமதி ஆகிய இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக குடும்பத்தில் அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. 

அந்த வகையில் நேற்றும் கணவன்- மனைவி இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு உண்டானது. இதில் ஆத்திரமடைந்த சேட்டு தனது மனைவியான பானுமதியின் கழுத்தை இறுக்கமாக துணியால் பிடித்து நெரித்ததாக கூறப்படுகிறது. இதில் பானுமதி சுயநினைவு இல்லாமல் கீழே விழுந்துள்ளார். பின்னர் தலையணையை வைத்து அழுத்தி கொலை செய்ததாக தெரிகிறது.

பானுமதி

மனைவி உயிரிழந்ததை அறிந்து அச்சமடைந்த சேட்டு உடனடியாக வீட்டிலிருந்து வெளியேறினார். பின்பு மாலை வழக்கம் பள்ளிகளில் இருந்து இரண்டு மகன்களையும் அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வருவது போல வருகை தந்து தனது மனைவி பானுமதி சுயநினைவின்றி கிடப்பதாக கூறி கதறி அழுது நாடகத்தை நடித்து அரங்கேறியுள்ளார்.

உடனடியாக உறவினர்களுடன் சேர்ந்து பானுமதியை ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் இவர் ஏற்கனவே உயிரிழந்து பல மணி நேரம் ஆகியுள்ளதாக தெரிவித்தனர்.

மேலும் பானுமதியின் முகம் உட்பட பல்வேறு பகுதிகளில் காயங்கள் இருப்பதைக் கண்ட மருத்துவர்கள் ஆற்காடு நகர காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவம் குறித்து விசாரித்து வந்த காவல் துறையினர் மர்மமான முறையில் இறந்த பானுமதியின் மரணம் குறித்து அவரது கணவர் சேட்டுவிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பானுமதி

போலீசாரின் விசாரணையில் சேட்டு எலக்ட்ரிஷன் வேலையை முடித்து விட்டு பிற்பகல் உணவு உட்கொள்ள வீட்டிற்கு வந்ததாகவும் அப்போது பானுமதியிடம் ஏற்பட்ட வாக்குவாதத்தால் ஆத்திரமடைந்து கழுத்தை நெறித்தும், முகத்தில் தலையணை வைத்து அழுத்தி கொலைச் செய்ததாகவும் போலீசாரிடம் ஒப்புக் கொண்டார். பின்னர் அவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web