இன்றும், நாளையும் சென்னை முழுவதும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம்

 
வாக்கா
 

 

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர். பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. இதற்காக நவம்பர் தொடக்கத்தில் இருந்து வீடு, வீடாக விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டு, அவற்றை திருப்பி அளிக்க டிசம்பர் 4 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது. பின்னர் இந்த கால அவகாசம் டிசம்பர் 11 வரை நீட்டிக்கப்பட்டு, மீண்டும் 3 நாட்கள் கூடுதலாக வழங்கப்பட்ட நிலையில் டிசம்பர் 14 இறுதி நாளாக நிர்ணயிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து டிசம்பர் 19-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

வரைவு வாக்காளர் பட்டியல்

வெளியிடப்பட்ட வரைவு பட்டியலில் பெயர் இடம்பெறாதவர்களுக்கு சிறப்பு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வாக்காளர் சேர்க்கை, திருத்தம் மற்றும் மறுப்பு தொடர்பான விண்ணப்பங்களை ஜனவரி 18 வரை அளிக்கலாம். பெயர் சேர்க்க விரும்புவோர் படிவம் 6-ஐ பூர்த்தி செய்து, அதனுடன் உறுதிமொழி படிவத்தையும் சமர்ப்பிக்க வேண்டும். இதில் 2002, 2005 பட்டியல்களில் இடம்பெற்ற பெயர் அல்லது பெற்றோர் விவரங்களை குறிப்பிட வேண்டும். தகவல்கள் சரியில்லையெனில் அதற்கான ஆவணங்களை வழங்க வேண்டும்; இதில் ஆதார் ஏற்றுக்கொள்ளப்படாது.

தமிழக வாக்காளர் பட்டியலில் இந்தி மொழியில் அச்சான பெயர்கள்!! சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனம்!!

படிவம் 6 மற்றும் படிவம் 8 ஆகியவை வாக்குச்சாவடி நிலை அலுவலர் அலுவலகங்கள், வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களில் பெறலாம். மேலும் ECINET செயலி மற்றும் voters.eci.gov.in இணையதளம் மூலமாகவும் ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியும். இந்நிலையில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இன்று மற்றும் நாளை (டிசம்பர் 20, 21) சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!