கல்லூரி விழாவில் நடனமாடிய படியே சுருண்டு விழுந்து மாணவர் பலி!

 
அபிஜித் ஷிண்டே

கல்லூரியின் விழாவில், மேடையில் நடனம் ஆடிக் கொண்டிருந்த முதலாம் ஆண்டு மாணவர், நடனமாடிய படியே திடீரென மயங்கி கீழே விழுந்து மரணமடைந்தார். விழாக்கோலம் பூண்டிருந்த கல்லூரி வளாகமும், கொண்டாட்ட மனநிலையில் இருந்த மாணவர்களும் சோகத்தில் ஆழ்ந்தனர். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தில் விழா ஒன்று நடைபெற்றது. இதில் மாணவர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு நடனமாடியுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக அபிஜித் ஷிண்டே (26 ) என்ற முதலாம் ஆண்டு மாணவர், திடீரென சுருண்டு விழுந்தார்.

இதனால் சக மாணவர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுச்செல்ல அவரை மீட்டபோதும் அங்கேயே மாணவர் அபிஜித் ஷிண்டே உயிரிழந்தது உறுதியானது.இதுகுறித்த தகவலின்பேரில் அங்குசென்று போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, விழாவில் நடனமாடிக் கொண்டிருந்த போது விழுந்து உயிரிழந்த மாணவர் மகாராஷ்டிர மாநிலத்தின் நாசிக் நகரைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. 

அபிஜித் ஷிண்டே

இதனிடையே பல்கலைக்கழக நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர் ஒருவரின் துரதிர்ஷ்டவசமான மரணம் எங்களுக்கு அதிர்ச்சியையும் ஆழ்ந்த துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பல்கலைக்கழகத்தின் ஆண்டு விழாவின் தொடக்க நிகழ்வில் நடனம் ஆடிய மாணவர் எதிர்பாராத நேரத்தில் சுருண்டு விழுந்தார். 

உடனடியாக அவருக்கு மருத்துவ உதவி அளித்தும், காப்பாற்ற முடியவில்லை. மாணவரின் இறப்புக்கு அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம்  இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம், என்று கூறப்பட்டுள்ளது.

அபிஜித் ஷிண்டே

இதனிடையே, பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து விடுதிக்குச் சென்றுவருவதற்கான பேருந்திற்காக நிர்வாகத்தால் வசூலிக்கப்படும் கட்டணத்தை ரத்து செய்ய வலியுறுத்தி மாணவர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். பிப்ரவரி 22 முதல் நடைபெறும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் முதல் நாள் மட்டும் அபிஜித் ஷிண்டே பங்கேற்றிருக்கிறார். பிப்ரவரி 23, 24 ஆகிய தேதிகளில் அவர் உண்ணாவிரதத்தில் பங்கேற்கவில்லை எனவும் பல்கலைக்கழகம் கூறியுள்ளது.மாணவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் முடிவு தெரிய வந்த பிறகு தான் மாணவரின் மரணத்துக்கான காரணம் தெரிய வரும் என போலீசார் கூறுகின்றனர். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web