வீட்டு படுக்கையறையில் திடீர் வெடிவிபத்து... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி, ஒருவர் படுகாயம்!
ஹரியாணா மாநிலத்தில் பஹதூர்காரில் வீட்டில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியாகியுள்ளனர். ஒருவர் படுகாயம் அடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் இவ்விபத்து ஏற்பட்டிருக்கலாம் என அக்கம் பக்கத்தினர் கூறுகின்றனர்.

ஆனால் காவல்துறையினர் இந்த வெடிவிபத்து படுக்கையறையில் நேர்ந்ததால் அதற்கான சாத்தியக்கூறு இல்லையென்று காவல் துறையினர் தெரிவித்தனர்.
காவல்துறை துணை ஆணையர் மயங்க் மிஸ்ரா இது குறித்து "இந்த விபத்து சிலிண்டர் வெடித்ததால் ஏற்பட்ட விபத்து அல்ல, படுக்கையறையில் நடந்துள்ளது. இதனால் வீடு முழுவதும் தீக்கறையாகியுள்ளது. இவ்விபத்தில் சிக்கி 4 பேர் பலியாகினர்; ஒருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பலியான 4 பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்." எனக் கூறியுள்ளார்.

வெடி விபத்துக்கான காரணத்தை அறிய, வெடிகுண்டு நிபுணர்களையும் தடவியல் ஆய்வகத்தின் குழுவையும் வரவழைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், ஏசி வெடித்து விபத்து ஏற்பட்டதா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக மயங்க் மிஸ்ரா தெரிவித்தார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
