தங்கும் விடுதியில் திடீர் தீவிபத்து !! 10 பேர் பலி!!

நியூசிலாந்து தலைநகரம் வெலிங்டனில் செயல்பட்டு வரும் தங்கும் விடுதிஒன்றில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகினர். உள்ள நியூடவுன் நகரில் 4 மாடிகள் கொண்ட விடுதி ஒன்று செயல்ப்பட்டு வருகிறது. இந்த விடுதியில் நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், 3 வது மாடியில் ஏற்பட்ட பயங்கர தீயை அணைக்க உடனடியாக தீயணைப்பு மற்றும் அவசர பணியாளர்கள் அழைக்கப்பட்டனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 52 பேர் தீயணைப்பு வீரர்களால் வெளியேற்றப்பட்டனர். குறைந்தபட்சம் 5 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர்களில் ஒருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிய வந்துள்ளது.
At least six people are dead and 11 more are unaccounted for after a fire at a 92-room hostel in the #NewZealand capital of #Wellington.
— Media Warrior (@MediaWarriorY) May 16, 2023
The Loafers Lodge hostel in the city’s south, caught fire overnight. pic.twitter.com/emI1BK5RsJ
இதற்கிடையில் 20 பேரை கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறப்படுகிறிது. சுமார் 15 பேர் சம்பவ இடத்திலேயே சிகிச்சை பெற்றனர். இந்த சம்பவம் தொடர்பான விசாரணையில், தங்கும் விடுதியில் வேண்டுமென்றே தீ வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.சுமார் 92 பேர் தங்கும் வசதி உள்ள இந்த விடுதியில் தீ விபத்து ஏற்பட்டபோது, உள்ளே எத்தனை பேர் இருந்தனர் என்பது தெளிவாக தெரியவில்லை. தீ விபத்து ஏற்பட்டபோது தப்பிக்கும் முயற்சியில், ஜன்னலில் இருந்து குதிக்க முயன்றபோது ஒருவர் காயமடைந்ததாகவும், ஐந்து பேர் வான்வழி கருவியைப் பயன்படுத்தி பணியாளர்களுடன் கூரையில் இருந்து மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து நியூசிலாந்து பிரதமர் கிறிஸ் ஹிப்கின்ஸ் கூறுகையில், “இது உண்மையில் சோகமான சூழ்நிலை. கட்டிடத்தில் இருந்து அனைவரும் அகற்றப்பட்டு தீ அணைக்கப்பட்டதை பணியாளர்கள் உறுதி செய்த பிறகு, தீ விபத்திற்கான காரணம் ஆராயப்படும். எங்கள் எண்ணங்கள் சம்பந்தப்பட்ட அனைத்து தீயணைப்பு வீரர்கள் மற்றும் இன்றைய துயரத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இருக்கும்” என தெரிவித்துள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!