சாலையின் தரைப்பாலத்தில் திடீர் ஓட்டை!

பாலக்கோடு அடுத்த கரகதஅள்ளியில் இருந்து செல்லும் தார்சாலை அமைந்துள்ளது. இந்த சாலையில் தரைப்பாலம் ஒரு பகுதி உடைந்து ஆபத்தான நிலையில் இருந்து வருகிறது. அந்த வழியாக செல்லும் டூவீலர் வாகன ஓட்டிகள் பாலத்தின் ஓட்டையில் விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
அந்தப்பகுதியில் உள்ள குழந்தைகள் ஓட்டையினுள் விழுந்து உயிர்ச்சேதம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.கடந்த 2 ஆண்டுகளாக உடைந்த பகுதி சீரமைக்கப்படாமல் இருப்பதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்ட வண்ணம் உள்ளது.
இது குறித்து பாலக்கோடு வட்டார வளர்ச்சி அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். இந்த நிதி நிலையை காராணம் காட்டி உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால், மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!