இளைஞர் கொலையில் திடீர் திருப்பம்... மனைவியே கொன்றது அம்பலம்!
சென்னை கொளத்துாரில் லாரி ஓட்டுநர் மரணமடைந்தது தொடர்பான வழக்கில் திடீர் திருப்பமாக மனைவியே கணவனைக் கொலைச் செய்தது தெரிய வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கொளத்தூர் பவானி நகரைச் சேர்ந்தவர் ராஜசேகர். லாரி ஓட்டுநரான இவரது மனைவி சித்ரா. இவர்களுக்கு, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த அக்டோபர் 31ம் தேதி தீபாவளியன்று காலை முதலே மது அருந்திய ராஜசேகர், மாலையில் மது போதையில் வீட்டுக்கு சென்றுள்ளார்.
அப்போது வீட்டில் துாங்கிக் கொண்டிருந்த ராஜசேகரை இரவு அவரது மனைவி எழுப்பியபோது எழுந்திருக்கவில்லை என கூறப்பட்டது. உடனடியாக ராஜசேகரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதித்ததில் அவர் ஏற்கெனவே உயிரிழந்ததாக கூறப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த ராஜமங்கலம் போலீசார் ராஜசேகரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ராஜசேகரின் பிரேத பரிசோதனை அறிக்கையில், ராஜேசேகர் கழுத்தின் வலது பக்கத்தில் காயம் உள்ளது தெரிய வந்தது. அவர் கழுத்து நெரித்து கொல்லப்பட்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் அவரது மனைவியிடம் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டதில், ராஜசேகரின் மனைவி சித்ரா மற்றும் ராஜசேகர் ஓட்டி வந்த லாரியின் உரிமையாளர் தனசேகர் ஆகிய இருவரும் சேர்ந்து ராஜசேகரை கொன்றது தெரிய வந்தது.சம்பவத்தன்று மது போதையில் வீட்டிற்கு சென்ற ராஜசேகர் அங்கே தனது முதலாளி தனசேகர் இருப்பதை கண்டு ஆத்திரம் அடைந்துள்ளார். இது குறித்து தனது மனைவியிடம் சண்டையிட்டுள்ளார்.
ராஜசேகர் மனைவியுடன் சண்டை போட்டதை அவரது மகளும் நேரில் பார்த்துள்ளார். போலீசாரின் விசாரணையின் போது, 'ராஜசேகர் வீட்டிற்கே தான் செல்லவில்லை' என தனசேகர் கூறினார். ஆனால் அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் ராஜசேகரின் வீட்டிற்கு தனசேகர் சென்றது பதிவாகி இருந்தது. சித்ராவும், கள்ளக்காதலனான தனசேகரும் சேர்ந்து, ராஜசேகரை கழுத்தை நெரித்து கொன்று விட்டு, அளவுக்கு அதிகமான போதையில் ராஜசேகர் இறந்ததாக நாடகமாடியுள்ளது ராஜமங்கலம் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!