குளிர்பான கிடங்கில் பயங்கர தீ விபத்து... வானுயர எழுந்த புகையால் வாகன ஓட்டிகளுக்கு மூச்சுத்திணறல்!

 
குளிர்பான கிடங்கில் பயங்கர தீ விபத்து... வானுயர எழுந்த புகையால் வாகன ஓட்டிகளுக்கு மூச்சுத்திணறல்!  

தமிழகத்தின் தலைநகர் சென்னை பூந்தமல்லி - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில்   தனியார் குளிர்பான கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.குளிர்பான கிடங்கில் ஏற்பட்டுள்ள தீ விபத்தால் குடோனில் உள்ள பொருட்கள் வெடித்து சிதறின. இதனால்  அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்

திடீர் தீ விபத்து காரணமாக கரும்புகை அதிக அளவில் வெளியேறி வருவதால் அப்பகுதி முழுவதும் புகைமண்டலமாக காட்சியளிக்கிறது. பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு கண் எரிச்சல் மற்றும் மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. தீ விபத்து ஏற்பட்ட உடன் குளிர்பான கிடங்கில் பணிபுரிந்தவர்கள்   உடனடியாக அங்கிருந்து  வெளியேற்றப்பட்டனர். இதன் காரணமாக உயிர் சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை.

தீயணைப்பு வாகனம் தீ நெருப்பு

தொடர்ந்து 45 நிமிடங்களுக்கு மேலாக எரிந்து வரும் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.   தீ விபத்திற்கான காரணம்  குறித்து பூந்தமல்லி போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு  வருகின்றனர். முழுமையாக தீயை அணைத்த பிறகே தீயில் எரிந்த பொருட்கள் குறித்த தகவல் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web