துபாயில் பயங்கர தீவிபத்து..!! தமிழர்கள் 2 பேர் உட்பட 16 பேர் உயிரிழப்பு ! 9 பேர் படுகாயம்!!

 
துபாய்

துபாய் Deira Burj Murar அல் ராஸ் பகுதியில் பல மாடி குடியிருப்பு கட்டிடம் அமைந்துள்ளது. இங்கு இந்தியர்கள் கணிசமாக வசித்து வந்தனர். இக்குடியிருப்பின் 4-ஆவது மாடியில் இயங்கி வந்த சூப்பர் மார்க்கெட் ஒன்றில் சனிக்கிழமையன்று திடீரென தீப்பிடித்தது. இந்த தீ மளமளவென பரவி அடுக்குமாடி குடியிருப்பு முழுவதும் பரவியது.

பின்னர் சிறிது நேரத்தில் அந்த கட்டடத்தின் மற்ற பகுதிகளுக்கும்  தீ பரவியதாக கூறப்படுகிறது. இந்த தீ விபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். 9 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

துபாய்

தீவிபத்து ஏற்பட்ட கட்டடத்தில் போதுமான தீதடுப்பு நடவடிக்கைகள், பாதுகாப்பு வசதி இல்லாததே இந்த பெரும் விபத்துக்கு காரணம் என்பது தெரியவந்துள்ளது. இது குறித்து துபாய் தீயணைப்புத்துறை அதிகாரிகள் கூறுகையில், துபாய் குடிமைத் தற்காப்பு நடவடிக்கை அறைக்கு முதலில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து தீயை அணைக்க முதல் குழு விரைந்து சென்றது. அடுத்த 6 நிமிடத்துக்குள் அந்த குழு அந்த கட்டடத்துக்கு சென்று தீதடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரம் 7 நிமிடங்களில் தீ முழுமையாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக தெரிவித்தனர்.

துபாய்

தீவிபத்தில் இறந்தவர்களில் சிலரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில் இந்தியர்கள் நான்கு பேர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. தமிழகத்தை சேர்ந்த இரண்டு பேர், கேரளாவை சேர்ந்த இரண்டு பேர், பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த மூன்று பேர் உள்பட 16  இறந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!