மில்லிங் செய்த பாலத்தில் மிரட்சிப் பயணம்! திருச்சிக்கு முதல்வர் வந்தும் அமைச்சர்கள் அலட்சியமா? கதறும் அதிகாரிகள்!

 
காவிரி பாலம் திருச்சி

காவிரிப் பாலம் விரிவாக்க இணைப்புகள் தொடர்பான பேச்சு வார்த்தையின் போது ஏற்பட்ட கடும் நெருக்கடிகள் குறித்து சாலைப் பயனாளிகள் தொடர்ந்து புகார் அளித்ததைத் தொடர்ந்து, நெடுஞ்சாலைத்துறை மூலம் ரூபாய் 6.87 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஜனவரி மாதத்திற்குள் பணியை முடித்து விடுவோம் என்ற முந்தைய வாக்குறுதியை,  நிறைவேற்றாததால், திருச்சி மாநகரருக்கும் ஸ்ரீரங்கத்துக்கும் இடையே, கடும் நெரிசல் மிகுந்த சென்னை பைபாஸ் ரோடு வழியாக பயணம் செய்வது பயங்கரமான அனுபவமாக இருந்ததாலும், கடுமையான பெட்ரோல் விலை ஏற்றத்தால் கடந்த சில மாதங்களாக பல மிடில் கிளாஸ் மாதவன்கள் கையை சுட்டதாலும் கடும் அதிருப்தியில் இருந்தார்கள் மக்கள். 

இந்நிலையில் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், புணரமைப்பு பணிகள் நிறைவடையும் தருவாயில் இருப்பதால், 15 நாட்களுக்குள் பாலம் மக்களின் பயன்பாட்டிற்காக மீண்டும் திறக்கப்படும் எனக் கூறிய நிலையில், அந்த நாட்களும் கடந்து விட்டது. 

காவிரி பாலம் திருச்சி

இருப்பினும், நேற்று திருவாரூர் சென்ற முதல்வர் காவிரிப் பாலத்தை திறந்து வைப்பார் என பொதுமக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது. எத்தனை நாட்களுக்குத் தான் இப்படியோ என உச் கொட்டியபடி மில்லிங் செய்யப்பட்ட பாலத்தில் மிரட்சி பயணத்தை தொடங்கி விட்டனர் பொது மக்கள். ஏனெனில் திருச்சி மாநகர் முழுவதுமே சாலைகள் இப்படித் தான் இருக்கிறது என அங்கேயே வாகனத்தை ஓட்டி முழுசாக வீட்டை அடைந்து விடுகிறோம் என்கிறார்கள். இன்னும் எத்தனை நாட்களுக்கு இப்படி சாதனை பயணம் தொடருமோ?

மார்ச் ஒன்றாம் தேதி தமிழக முதல்வரின் பிறந்த நாள். ஆகவே வேண்டுமென்றே அதிகாரிகள் தாமதப்படுத்துகிறார்கள் என்ற குற்றச்சாட்டை சொல்கிறார்கள் ஆளும் கட்சிக்கு எதிரானவர்கள். முதல்வரே மக்கள் மீது கொஞ்சம் கருணை காட்டுங்கள் பாலத்தை திறந்து விடுங்கள் என கோரிக்கை வைக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.  

காவிரி பாலம் திருச்சி

பொது மக்களோ முதல்வர் வருகிறார் என்று தெரிந்ததுமாவது போக்குவரத்து இல்லாத பாலத்தில் போர்கால அடிப்படையில் பணிகளை முடித்திருக்க வேண்டாமா? இரண்டு அமைச்சர்களும் ஈரோட்டிற்கு பிரச்சாரத்திற்கு சென்று விட்டார்கள். எங்கள் கஷ்டம் அவங்களுக்கு எங்கே தெரிய போகிறது என கண்ணை கசக்குகிறார்கள் அதிகாரிகள்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web