மொத்தம் 135 சவரன் நகைகள்... அடகு கடையில் பணம் செலுத்தியும் நகைகளைத் தராததால் கதறும் பெண்!
தூத்துக்குடி மாவட்டத்தில் அடகு வைத்த 135 பவுன் நகைகளையும், ரூ.50 லட்சம் மதிப்பிலான பத்திரங்களையும் வைத்து பணம் பெற்றிருந்த நிலையில், பணத்தைச் செலுத்திய பிறகும் நகைகளைத் தராமல் கொலைமிரட்டல் விடுத்ததால், நகைகளை மீட்டுத்தரக் கோரி எஸ்பியிடம் பெண் மனு அளித்துள்ளார்.

தூத்துக்குடி காந்திநகரைச் சோ்ந்த ஜெயராணி என்பவா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் அளித்த மனுவில், "எனது மருத்துவ செலவிற்காக வீட்டு அருகே உள்ள ஜீவா என்பவரின் நகை அடகு கடையில், என்னுடைய நகை, உறவினா்கள் நகை என 135 பவுன் நகைகள், ரூ.50 லட்சம் மதிப்பிலான நிலப் பத்திரம் ஆகியவற்றை கடந்த ஆண்டு அடகு வைத்தேன்.
இந்நிலையில், அடமானம் வைத்ததற்கான பணத்தை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு செலுத்தி நகை மற்றும் நிலப் பத்திரத்தி மீட்க சென்ற போது, அவா் தரமறுத்து கொலை மிரட்டல் விடுத்தாா். எனவே, எனது நகை மற்றும் நிலப்பத்திரம் ஆகியவற்றை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!
